ஆஸ்திரேலியாவில் நாளை முதல் ஏற்படும் நேர மாற்றம்
Daylight saving முறையின் முடிவுடன், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நாளை முதல் ஒரு மணி நேரம் நேரம் பின்னோக்கி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியா – வடக்கு பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து தவிர அனைத்து மாநிலங்களிலும் நேரம் நாளை அதிகாலை 03:00 மணி முதல் ஒரு மணி நேரம் பின்னுக்குத் தள்ளப்படும்.
அதாவது அந்தந்த மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகாலை 3 மணி முதல் 2 மணி வரை நேரம் மாறும்.
கையடக்க தொலைபேசிகள்- கணினிகள் – கைக்கடிகாரங்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் தானாகவே நேரத்தை மாற்றிவிடும், ஆனால் சுவர் கடிகாரங்கள் போன்ற சாதனங்கள் மாற்றப்பட வேண்டும்.
இந்த திருத்தங்கள் நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா – தெற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் ACT ஆகிய மாநிலங்களுக்கு அமலுக்கு வரும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பகல் சேமிப்பு முறை 1992 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படவில்லை.