பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
UK முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் குறிப்பிட்ட Magnum ஐஸ்கிரீம் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மேக்னம் கிளாசிக் ஐஸ்கிரீம் குச்சிகளின் சில பெட்டிகள் (3×100 மிலி) உலோகத் துண்டுகளைக் கொண்டிருக்கலாம் என்பதால் திரும்பப் பெறப்படுவதாக யுனிலீவர் தெரிவித்துள்ளது.
உணவு தர நிர்ணய முகமையின் இணையதளத்தில், “மேற்கண்ட தயாரிப்புகளை நீங்கள் வாங்கியிருந்தால், அதை சாப்பிட வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் L3324, L3325, L3326, L3327 மற்றும் L3328 போன்ற தொகுதிக் குறியீடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)