ஸ்பெயினில் Telegram செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

ஸ்பெயினில் Telegram செயலியின் பயன்பாட்டைத் தற்காலிகமாகத் தடை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களின் அனுமதியின்றிப் பயனீட்டாளர்கள் சில தரவுகளைப் பதிவேற்றம் செய்வதை Telegram அனுமதிக்கிறது என்று சில ஊடக நிறுவனங்கள் புகாரளித்தன.
புகார் குறித்த விசாரணை நடைபெறும் வரை Telegram செயலியின் சேவைகள் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஸ்பெயினில் அதிகம் உபயோகிக்கப்படும் தொடர்புச் செயலிகளில் Telegram நான்காவது இடத்தில் உள்ளது.
சுமார் 19 சதவீத ஸ்பானிய மக்கள் Telegram சேவைகளைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)