வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகள் தொடர்பில் அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





