வட அமெரிக்கா

அமெரிக்காவில் பொருத்தமான வரன் தேடுவதற்காக பேஸ்புக்கில் தன்னை விற்க இளைஞர்!

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மைக்கேல் என்னும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனக்கான ஜோடியை தேடியிருக்கிறார்.

பேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸ் பகுதியில் தன்னை பட்டியலிடவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஜோடி தேடலில் புதுமையானதாகவும், எளிதானதாகவும் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸை அவர் நாடி இருக்கிறார்.

மார்க்கெட்பிளேஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக் தனது மின் வணிகத்துக்கான சந்தையை கட்டமைத்து வருகிறது. இதில் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் விநியோகப் பொருட்களை பட்டியலிடலாம்.

மார்க்கெட்பிளேஸ் தளத்தின் மூலம் வாங்குவோர் – விற்போர் எளிதில் சந்திக்க வாய்ப்பாகிறது. இதில் தான் தனது புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்களை சேர்த்திருக்கிறார் மைக்கேல். அங்கே ஆர்வம் தெரிவிப்போருக்கு கூகுள் படிவத்தை அனுப்பி தொடர்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறார்

ஆச்சரியமூட்டும் வகையில் மைக்கேலுக்கு பொருத்தமான நட்பூக்கள் ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் பூத்திருக்கின்றன.

பேசிப்பழகி பிடித்திருந்தால் வாழ்க்கையில் இணையவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார் மைக்கேல். ஆனால் தனது வசிப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே ஜோடியைத் தேடுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வகையில் சிறப்பான ஜோடியை தேடித்தர, இதர டேட்டிங் ஆப்ஸை விட ஃபேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸ் உபயோகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!