எல்லை பகுதியை பாதுகாக்க துருப்புக்களை அதிகரிக்கும் இந்தியா : எச்சரிக்கும் சீனா!
அண்டை நாடான சீனாவுடனான தனது எல்லைகளைக் காக்க மேலும் 1,000 துருப்புக்களை விடுவிப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் துருப்புக்களை அதிகரிப்பது எல்லை பகுதியில் பதற்றத்தை குறைக்காது என பெய்ஜிங் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் இந்தியா ராணுவத்தை அதிகப்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் நிலைமையை எளிதாக்குவதற்கோ அல்லது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கோ உதவாது” எனத் தெரிவித்துள்ளார்.
“எல்லைப் பகுதிகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)