பிரேசிலில் பதிவான 2000 காட்டுத்தீ சம்பவங்கள்!
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் உள்ள ரோரைமா மாநிலத்தில் 2000 தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், செயற்கைக்கோள் சென்சார்கள் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 28 க்கு இடையில் தீப்பிழம்புகளைக் கண்டறிந்ததாகக் கூறியது.
தீ விபத்துகளின் எண்ணிக்கை மாதாந்திர சராசரியான 376 ஐ விட மிக அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
எல் நினோ, பசிபிக் பகுதியின் இயற்கையான மற்றும் தற்காலிக வெப்பமயமாதல், வடக்கு வெப்பமண்டல அட்லாண்டிக் நீரின் வெப்பமயமாதல் ஆகியவை தற்போதைய நிலைமைக்கு பங்களித்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், காட்டுத் தீயின் அபாயம் அதிகரித்ததால், ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பல பிராந்தியங்களில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவிக்கத் தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.