உலக நகரங்களின் தரவரிசைப்படுத்தலில் லண்டனுக்கு கிடைத்த இடம்!
உலக நகரங்களின் தரவரிசைப்படுத்தலில் பிரித்தானியாவின் முக்கிய இரு நருகரங்கள் முதல் முப்பது இடங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளன.
இதன்படி பிரித்தானியாவின் லண்டன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், மென்செஸ்டர் முப்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
லண்டனில் உள்ள வாழ்க்கை முறை, போக்குவரத்து, சுற்றுசூழல் அமைப்பு என்பன அதன் புள்ளியை 8.7 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மக்கள் தொகை, சில்லறை செலவினம் மற்றும் சராசரி குடும்ப வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார செயல்திறனின் ‘எந்த அளவீட்டிலும் லண்டன் சிறந்து விளங்கவில்லை’ என்று நிதி நிர்வாகக் குழு கூறியது, ஆனால் ஒவ்வொன்றிலும் ‘நன்றாக’ உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம் மற்றும் போக்குவரத்து ஆகிய நான்கு முக்கிய அளவுகோல்களில் நகரங்களின் செயல்திறனை குறியீட்டு தரவரிசைப்படுத்துகிறது.
அதேநேரம் வருங்காலத்தில் லண்டனில் கடுமையான சாலை நெரிசல், மோசமான பொதுப் போக்குவரத்து நம்பகத்தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்பதுடன், ‘மிகவும் மோசமான நீரின் தரம் மற்றும் எதிர்காலத்தில் தண்ணீர் அழுத்தத்தின் அதிக வாய்ப்புள்ளது எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.