பிரித்தானியாவில் புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க £820 மில்லியன் ஒதுக்கீடு!
பிரித்தானியாவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரிச்சினையை சமாளிக்கும் வகையில் தொழிற்பயிற்சியை மேம்படுத்தும் வகையில் £820 மில்லியன் பவுண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களின் கீழ், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் சலுகைகள் சார்ந்த வேலைகளுக்கு பயிற்சியளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
2026 வசந்த காலத்தில் இருந்து 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும், வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இளைஞர்களின் வேலையின்மை அதன் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ள நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





