30 வயதிற்குள் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்
மகளிர் அனைவருக்குமே, தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
நிதி குறித்த அறிவு:
இளம் வயது முதலே, சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும், கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது எப்படி, கடன் வாங்கினால் அதை சரியாக செலுத்துவது எப்படி போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இது, எதிர்கால சேமிக்குகளுக்கும், நிதி சுதந்தித்திற்கும் உதவும்.
டிஜிட்டல் அறிவு:
சமூக வலைதளங்களை எப்படி உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகித்தாலும் அதை பாதுகாப்பாக கையாள்வது எப்படி என்பது குறித்த அறிவு இருக்க வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. ஆன்லைன் ஆப்கள், வெப்சைட்கள் உள்ளிட்டவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த அடிப்படை அறிவை அனைவரும் கற்று வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை
ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்… மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்
உணர்வு குறித்த அறிவு:
நாம் என்ன நினைக்கிறோம், நமக்கு எந்த மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பது குறித்த உணர்வு அனைத்து பெண்களுக்கும் இருக்க வெண்டும். பிறரை புரிந்து கொள்ளுதல், பிரச்சனைகளை கையாளுதல் போன்றவற்றை கற்று வைத்திருத்தல் வேண்டும்.
பேச்சு மற்றும் எழுத்து திறன்:
சரியான பேச்சு மற்றும் எழுத்து திறன், அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம். இது, ஒரு குழுவை வழிநடத்துவது மட்டுமன்றி, உங்களை ஒரு தனி ஆளாக பெரிய அளவில் உயர்த்துவதற்கும் வழிவகுக்கும். இது தொழில் ரீதியான வளர்ச்சிக்கு உதவுவதோடு நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்ள உதவும். இதனால், பெரிய பெரிய ஆட்களுடன் தொழில் ரீதியான நெட்வர்கிங்கை மேம்படுத்தவும் உதவும்.
தற்காப்பு கலை:
அடிப்படை ரீதியான தற்காப்பு கலையினை கற்று வைத்திருப்பது ஆண்கள்/பெண்கள் என அனைவருக்குமே உதவி புரிவதாக இருக்கும். தனியாக வெளியில் செல்லும் போது, நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் போது, இரவில் எங்கேனும் சிக்கிக்கொண்டால் அங்கிருந்து மீண்டு வர இந்த தற்காப்பு கலை உதவும். இதனால், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதோடு, ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கும் உதவலாம்.
அடிப்படை சமையல்:
பெண்கள் அனைவரும், அவர்களின் உடலுக்கு ஏற்ற உணவு எது? எதை, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். தனியாக வாழ்ந்தாலும், குடும்பத்துடன் இருந்தாலும் கிடைக்கும் பணத்தை வைத்து, என்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். பிறருக்காக இல்லை என்றாலும், தான் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற காரணத்திற்காக பெண்கள்/ஆண்கள் என அனைவருமே சமையல் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.
தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள தெரிவது:
தொழில் ரீதியாக வளர வேண்டும் என்றால், பிறருடன் நட்புறவை அல்லது தொழில் ரீதியான உறவினை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். இது, வேறு வேலை கிடைப்பதற்கு உதவுவதுடன் உயர் இடத்தில் இருக்கும் பலர் நம்மை தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. போட்டி நிறைந்த இந்த உலகில், உயரத்தை அடைய இது போல செய்வதால் நம்மை நாமே பிரபலப்படுத்திக்கொள்ள இயலும். இதனால் வாய்ப்புகளும் நம்மை தேடி வரும்.