பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 62 வயது நபர் கைது
பெங்களூரு(Bangalore) மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதற்காக 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ், டிப்ளோமா பட்டதாரி மற்றும் பெல்தூர்(Beldur) பகுதியில் உள்ளவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 13ம் திகதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இந்த மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில், உங்கள் மெட்ரோ ஊழியர்கள் எனது முன்னாள் விவாகரத்து பெற்ற மனைவி பத்மினியை பணி நேரத்திற்குப் பிறகு மனரீதியாக சித்திரவதை செய்வதாக எனக்குத் தெரிந்தால் மெட்ரோ நிலையங்களில் ஒன்றை வெடிக்கச் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்ததிலிருந்து ஒரு வாடகை அறையில் தனியாக வசித்து வருகிறார்.





