ஈரானில் ஆர்ப்பாட்டங்களால் 5000 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா, இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு!
ஈரானில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் குறைந்தது 5,000 பேர் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 500 பாதுகாப்புப் படையினரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரானின் தலைவர் அயதுல்லா அல்-கமேனியும் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஈரானின் அரச ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் மனிதாபிமானமற்றவர்கள் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடையவர்கள் தங்கள் நாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த மரணங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய தேசத்திற்கு ஏற்படுத்திய சேதத்திற்கு அவரை ஒரு குற்றவாளியாகக் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





