ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்ட 50 பேர் கைது!

தடைசெய்யப்பட்ட குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தில் டிஃபெண்ட் அவர் ஜூரிஸ் ஏற்பாடு செய்த போராட்டத்தில், “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன்.

நான் பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்ற வாசகத்தை  கையால் எழுதப்பட்ட பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ், ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவை அரசாங்கம் தடை செய்தது.

அந்தக் குழுவில் உறுப்பினராகவோ அல்லது ஆதரவளிக்கவோ கூடாது எனவும் அவ்வாறு செய்வது குற்றச் செயலாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்படுபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!