வாழ்வியல்

சிறந்த காதலியாக இருப்பதற்கு 5 வழிகள்!

ஒவ்வொரு ஆணும் தனித்துவமானவர்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பெண்களின் விஷயத்தில் அவர்களுக்கு வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கும்.

எனவே, அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணில் வெவ்வேறு விஷயங்களைத் தேடுகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் காதல் துணையிடம் விரும்பும் சில பொதுவான பண்புகள் உள்ளன.

How to Be a Good Girlfriend: 30 Ways

நீங்கள் திருமணமான தம்பதிகளைப்போலச் சண்டையிட்டால், சிறந்த நண்பர்களைப்போலப் பேசினால், முதல் காதலர்களைப்போல ஊர்சுற்றினால், உடன்பிறப்புகளைப்போல ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டால், நீங்கள்தான் உண்மையான காதலர்களாக இருக்க வேண்டும். பெண்களைப்போலவே, ஆண்களும் உறவில் வித்தியாசமான விஷயங்களை விரும்புகிறார்கள். எல்லா ஆண்களும் ஒரு பெண்ணில் வெவ்வேறு விஷயங்களை விரும்புகிறார்கள். ஆனால், காதல் என்று வரும்போது, ​​​​நாம் அனைவரும் ஓரளவிற்கு உணர்ச்சிவசப்படுகிறோம், மேலும், நாம் (ஒரு சில) அதே விஷயங்களை விரும்புகிறோம். இவற்றை வைத்துச் சிறந்த காதலியாக இருப்பதற்கு
5 வழிகள் என்னவென்று பார்ப்போம்…

30 Caring Ways to Be a Better Girlfriend & Make a Man Feel Lucky to Date You

1. சுயமரியாதையையும், நேர்மையையும் இழக்க வேண்டாம். நேசிக்கப்படுவதற்கான முதல் விதி உங்களை நீங்களே முதலில் நேசிப்பதாகும். இது கொஞ்சம் சுயநலமாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் உங்களை மதிக்கவில்லை என்றால், நேசிக்கவில்லை என்றால், நீங்கள் நேசிக்கும் ஒன்றை மற்றவர்கள் உங்களுக்காகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆண்கள் சுதந்திரமான பெண்களை மிகவும் விரும்புகிறார்கள்.

How to be a Good Girlfriend in 30 Ways

எனவே, நீங்கள் உங்களைக் கவனித்துக்கொள்வதில் சுதந்திரமாக இருங்கள். உங்கள் துணை ஏதாவது தவறான செயல் செய்தாலோ அல்லது பிடிக்காத செயல் செய்தால் அதைச் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கக்கூடாது. எங்கு உண்மையைச் சொன்னால் பிரிந்து போய்விடுவாரோ என்று தயங்கி இருந்து விடக்கூடாது. நீங்கள் சொல்லும் உண்மை ஒன்று அவரை மாற்றும். உங்கள் வாழ்வை மாற்றும். இரண்டும் நல்லதற்கே.

Tips and Tricks on How to Become a Good Girlfriend

2. ஆதரவாக இருங்கள்

எல்லாருடைய வாழ்க்கையும் ஒரே சமநிலையிலிருந்து விடாது. நாம் விரும்பும் நபருக்கு வாழ்க்கையில் சில பின்னடைவுகள் வரும். உடல்ரீதியான மன ரீதியான பிரச்னைகள் வரும். சில நேரங்களில் எளிமையான விஷயங்கள்கூட கடினமாக இருக்கும், அவர் கஷ்டப்பட்டு எவ்வளவு முயன்றாலும் எதுவும் வேலை செய்யாது. இந்த மாதிரி சூழ்நிலைகளில் பெண் இது வாழ்க்கையின் ஒரு கட்டம் என்பதைப் புரிந்துகொள்வதும், அதை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வதும் முக்கியமான ஒன்று. அவரது காதலியாக, நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். முன்னெப்போதையும்விட அவருக்கு இப்போது நீங்கள் மிகத் தேவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘எல்லாம் உங்களால்தான். நான் சொன்னதை முதலில் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. இனிமேல் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். உங்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவரைக் குறை கூற தொடங்கி விடாதீர்கள். அவர் ஏற்கனவே கடினமான சூழ்நிலையில் உள்ளார். எனவே, அவற்றை மோசமாக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசுங்கள், பிரச்னைக்கானத் தீர்வுகளை ஒன்றாகச் சிந்தியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

19 Things To Reassure Your Girlfriend Of Your Love

3. அவருக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள்.

உங்கள் காதலன் தனது நண்பர்களுடன் விருந்துக்குச் சென்று உங்களை அழைக்காதபோது, உங்களுடன் இருக்கும்பொழுது வேறு ஒருவருக்குச் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தால்​, அவர் உங்களைத் தவிர்க்க நினைப்பதாக நீங்கள் எண்ண வேண்டாம். நீண்ட நாள் பிறகு நண்பர்களைச் சந்தித்தால் அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடலாம். அங்கு மனைவியுடன் சென்றால் நண்பர்களுடன் உரையாடும் நேரம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், உங்களை விட்டுச் சென்றிருக்கலாம். அவர் தொலைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதுகூட உங்களை ஏமாற்றி இன்னொரு நபருடன் பேசுவதாக இல்லாமல், அவர் தொழில் ரீதியாகவும், வணிகம் ரீதியாகவும் பேசலாம் அல்லவா? முதலில் உங்கள் காதலன் உங்களுடன் நேரம் செலவிடவில்லை என்றால் அவர் உங்களை வெறுக்கிறார் அல்லது தவிர்க்க நினைக்கிறார் என்று நினைத்து விடக்கூடாது. உறவுகளுக்கு முக்கியமானது நம்பிக்கை மற்றும் உண்மை. உங்களின் உண்மையான அன்பை அவர் காப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும். அவருக்கான நேரத்தைச் செலவிட அவருக்கும் கொஞ்சம் வாய்ப்பை கொடுங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகாக மாறும் என்று பிறகு பார்ப்பீர்கள்.

101 Juicy Questions to Ask Your Girlfriend

4. சண்டைகளைப் பக்குவமாகக் கையாளுங்கள்.

வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஒரு முறைகூட உங்கள் துணையுடன் சண்டையிடவில்லை எனில் உங்கள் உறவு என்றோ அழிந்துவிட்டது. வாழ்வில் சண்டை இடாமல் இருக்க நீங்கள் ஒன்றும் ரோமியோ ஜூலியட் அல்ல. எப்போதாவது சண்டை ஏற்படும்பொழுது ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பக்குவம் அதிகமாகும். இதனால் உறவுகளின் வாழ்நாள் அதிகமாகும். கோபத்திற்குப்பின் வரும் அன்பு அலாதியாக இருக்கும். அந்த சண்டையை எப்படிப் பக்குவமாகக் கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள முடியும். சண்டை வருவதே நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும், அல்லது அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பெரும்பாலும் சண்டை வரும் பொழுது காது கொடுத்துக் கேட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் பலரும் இதைச் செய்வது இல்லை. உங்களுக்குள் ஏற்படும் சண்டையை உங்களுக்குள்ளாரே தீர்த்துக்கொள்ள வேண்டும் இதில் மூன்றாவது நபரோ அல்லது சமூக வலைத்தளங்களில் பரப்பி அனைவருக்கும் தெரியப்படுத்துவது ஒரு நல்ல செயல் அல்ல.

How Well Do You Know Your Partner? (341 Questions To Help You Understand  Each Other) - Her Norm

5. உங்கள் சொந்த நலன்களையும் ஆர்வங்களையும் வைத்திருங்கள்.

அந்த உறவுக்கு மேலேயும் அதற்கு அப்பாலும், நீங்கள் வாழ உங்கள் சொந்த வாழ்க்கை இருக்கிறது. அவ்வப்போது புதிய தோற்றத்தைப் பெறுங்கள். ஜிம்மிற்குச் செல்லுங்கள். ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள். தொழிலைப் பெறுங்கள். டிரெண்டில் இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு நீங்கள் முழுப் பொறுப்பு. எந்த உறவும் உங்களைத் தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள், ஆனால் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அது அர்த்தமுள்ளதாக இருக்கும் போது உங்கள் காதலனை அதில் தீவிரமாக ஈடுபடுத்துங்கள். உதாரணமாக, ஒருசில விஷயங்களில் அவரது கருத்தைக் கேட்கலாம்… அவருடைய கருத்து உங்களுக்கு முக்கியமானது என்று அவருக்கு உறுதியளிக்க எதையும் செய்யலாம். முட்டாள்தனமாகத் தோன்றினாலும், நீங்கள் அவருடைய கருத்தைப் பாராட்டுவதை அவர் விரும்புவார். உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ, அவ்வளவு உற்சாகமாக உங்கள் உறவும் மாறும்.

முன்பே சொன்னது போல, சுவையில் நாம் அனைவரும் வேறுபட்டவர்கள். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏமாற்றம் எதுவும் இல்லை. உங்கள் உறவை மதிப்பிடுவது மற்றும் உங்கள் துணையை முழுமையாகப் புரிந்துகொள்வது உங்களை ஒரு சிறந்த காதலியாக மாற்றும்.

நன்றி – கல்கி

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான