லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்ட 5 ரஷ்ய உளவாளிகள்
பிரிட்டனில் ரஷ்ய உளவு வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பல்கேரிய பிரஜைகள் லண்டன் நீதிமன்றத்தில் ஒரு சுருக்கமான விசாரணைக்காக வீடியோ லிங்க் மூலம் ஆஜரானார்கள்.
மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஆகஸ்ட் 30, 2020 மற்றும் பிப்ரவரி 8, 2023 க்கு இடையில் “ஒரு எதிரிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்குப் பாதகமான நோக்கத்திற்காக தகவல்களைச் சேகரிப்பதற்காக” சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் நோர்போக்கில் வசித்த பல்கேரிய பிரஜைகளான Orlin Roussev,Bizer Dzhambazov,Katrin Ivanova,Ivan Stoyanov, மற்றும் Vanya Gaberova,
இவர்கள் அனைவரும் இந்த ஆண்டு பெப்ரவரியில் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சுருக்கமாக ஆஜராகி, அவர்களின் பெயர் மற்றும் வயதை உறுதிப்படுத்த மட்டுமே பேசினார்கள்.
அடையாள ஆவணக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ரூசெவ், ட்ஜாம்பசோவ் மற்றும் இவனோவா ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தனி வழக்கில் சேர்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் விசாரணையில் அவர்கள் நவம்பர் 20 வரை காவலில் வைக்கப்பட்டனர்.