காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 44 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.





