தமிழ் இன அழிப்பின் 40வது வருடம்; பிரான்சில் நினைவுக்கல் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது.
பாரிசின் புறநகரான பொண்டி நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில் கறுப்பு யூலை நினைவாக மரம் நாட்டப்பட்டு கறுப்பு யூலை நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
செவ்வாய்கிழமை (18) மாலை 6.30 மணிக்கு நகரசபை முதல்வர்கள் மற்றும் உதவி நகரசபை முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள்அனைவரும் இணைந்து மரத்தினை நாட்டினார்கள்.
மரம் நாட்டியதைத் தொடர்ந்து பொண்டி நகரசபை முதல்வரால் கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவுக்கல் நினைவுக்கல்திரைநீக்கம்செய்யப்பட்டது
(Visited 24 times, 1 visits today)