“பத்ம பூஷன்” விருதை பெற்ற 4 தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

139 பேருக்கு இந்த முறை பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் அஜித், நடிகை ஷோபனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்று இருக்கிறது.
இதற்கு முன்னதாக பத்மபூஷன் பெற்ற நான்கு நடிகர்களை பார்க்கலாம்.
முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் பத்மபூஷன் விருதை பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக 2000 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் பத்மபூஷன் விருதை மத்திய அரசால் பெற்றார்.
அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு கமலஹாசன் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.
மேலும் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த முறை அஜித்துக்கு விருது வழங்க உள்ளது.
இதனால் தனது குடும்பத்துடன் அஜித் காலை டெல்லி புறப்பட்டிருக்கிறார். இன்று மாலை நடக்க உள்ள விழாவில் அஜித் விருது வாங்குவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.