ஏமன் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல் – நான்கு பேர் பலி

ஏமனின் ஹொடைடா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஹவுதி சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அனீஸ் அலஸ்பாஹி தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனீஸ் அலஸ்பாஹி கூறினார்.
அண்மைக்காலமாக ஏமனை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)