மத்திய கிழக்கில் சிக்கி தவிக்கும் 300,000 பிரித்தானிய மக்கள்!
மத்திய கிழக்கில் சுமார் 300,000 பிரித்தானிய மக்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இடம்பெற்று வரும் போர் சூழ்நிலை காரணமாக ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக அந்நாடுகளுக்கு சென்ற மக்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரித்தானிய மக்களை அழைத்துவரும் நடவடிக்கையாக அரசு பட்டய விமானம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த விமானத்தின் மூலம் ஓமானில் உள்ள மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 6,500 பிரித்தானியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பி வந்துள்ளனர்.
அதேநேரம் 160,000 க்கும் மேற்பட்ட பிரித்தானியர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அங்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





