அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில்(America) சட்டவிரோதமாக வசித்து, வணிக ஓட்டுநர் உரிமங்களுடன் லாரிகளை இயக்கும் 30 இந்தியர்களை அமெரிக்க எல்லை ரோந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கலிபோர்னியாவின்(California எல் சென்ட்ரோ செக்டரில்(El Centro sector) உள்ள எல்லை ரோந்து அதிகாரிகள், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாகன நிறுத்தங்களின் போது வணிக ஓட்டுநர் உரிமங்களுடன் 49 சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்ததாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு(CBP) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவைச்(India) சேர்ந்தவர்கள், இருவர் எல் சால்வடாரைச்(El Salvador) சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் சீனா(China), எரிட்ரியா(Eritrea), ஹைட்டி(Haiti), ஹோண்டுராஸ்(Honduras), மெக்சிகோ(Mexico), ரஷ்யா(Russia), சோமாலியா(Somalia), துருக்கி(Turkey) மற்றும் உக்ரைனைச்(Ukraine) சேர்ந்தவர்கள்.





