ராஜஸ்தானில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்(Jaipur) நடந்த ஒரு சாலை விபத்தில் ஒரு தாய், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்-டெல்லி(Jaipur-Delhi) நெடுஞ்சாலையில் சந்த்வாஜி(Chandwaji) காவல் நிலையப் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை-48ல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பயணிகள் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக NIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.





