பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டாரின் அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி..” எப்போது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் வெளியாகவுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், தனது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி பேசியிருந்தார். அதேபோல், காகம் – பருந்து என குட்டி ஸ்டோரியும் சொல்லி, ரசிகர்களுக்கு வைப் கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று லியோ வெற்றி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் விஜய்யின் பேச்சும் அவர் சொன்ன குட்டி ஸ்டோரியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரத்னகுமார் தொடங்கிய பருந்து – காகம் கதையை, இறுதியாக விஜய் முடித்து வைத்தார்.

விஜய் பல இடங்களில் ரஜினியை டார்க்கெட் செய்தே பேசியதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு பதிலடி கொடுக்க ரஜினியும் ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி டிசம்பர் 2வது வாரம் லால் சலாம் ஆடியோ லான்ச் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதனால், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் குட்டி ஸ்டோரி குதுகலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்