பொழுதுபோக்கு

கண்ணீரில் மூழ்கிய “சரிகமப” மேடை: இலங்கையர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…

சிறந்த பாடகர், பாடகிகளை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு செனல்களும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

ஆனால் இந்த போட்டியில் விஜய் டிவி மற்றும் ஜீ டிவி செனல்களுக்கு இடையில்தான் போட்டி மும்முரமாக இருக்கும்.

இரண்டு செனல்களும் சரிக்கு சமமாக தமது படைப்புக்களை கொண்டு வருகின்றார்கள. சிறந்த தொகுப்பாளர்களை இறக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த நடுவர்களை வைத்து போட்டிகளை நடத்துகின்றன.

அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் சரிகமப இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான கட்டம் நடைபெறுகின்றது.

அந்த வகையில் முதல் போட்டியாளராக சுசந்திகா தெரிவுசெய்யப்பட்டார். அடுத்த அதிஷ்டசாலி யார் என்பதை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு தற்போது விடை கிடைத்து விட்டது.

நேற்று நடைபெற்ற எபிசோட்டில் உலகத்தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இரண்டாவது போட்டியாளர் யார் என்பதை அறிவிக்கும் தருணம் வந்தது.

கோல்டன் பர்வோமன்ஸ் வாங்கிய 6 பேரையும் மேடைக்கு அழைத்தார் அர்ச்சனா. இதில் இலங்கை சபேசன் உள்ளிட்ட அனைவரும் ஆர்வத்துடன் மேடைக்கு வந்தார்கள்.

இதில் அனைவரது கருத்துக்களையும் கேட்டார் அர்ச்சனா, ஒருவர் மாறி ஒருவராக சபேசனிடம் மைக் வந்தது.

நான் எனக்காக பாட வந்தேன். ஆனால் இப்போது எனது நாட்டுக்காக பாடவேண்டிய தருணம் வந்துவிட்டதுஎன்றார்.

இதன்போது கவுன்டன் 10 இலிருந்து ஆரம்பித்து ஒன்று வரை வந்து முடிந்ததும், அனைவரும் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றனர்.

இறுதியாக சரிகமப சீசன் 5 இரண்டாவது போட்டியாளர் ஸ்ரீ ஹரிஎன்பதை நடுவர்கள் மூவரும் இணைந்து கூறினர்.

அரங்கமே மகிழ்ச்சியிலும், ஆனந்த கண்ணீரிலும் மூழ்கியது. மேடையை வணங்கிய ஸ்ரீ ஹரிக்கு மலர்ச்சொண்டு கொடுத்து வாழ்த்தினார்கள்.

இரண்டாவது பைனலிஸ்ட்டுக்கான கிரீடத்துடன் ஒய்யாரமாக தாயிடமும், தந்தையிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கி அவர்களை மேடைக்கு அழைத்து வந்து கௌரவப்படுத்தினார்.

பின் அனைவரும் காத்திருந்த அந்த தருணம். இரண்டாவது பைனலிஸ்ட்டாக கோல்டன் கதிரையில் அமர்ந்தார் ஸ்ரீ ஹரி.

இலங்கையர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், திறமைக்கு என்றுமே இடம் உண்டு.

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமே இல்லை என்ற உறுதியோடு முன்னோக்கி செல்கின்றனர் சரிகமப போட்டியாளர்கள்….

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!