25 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு சேவை, அபாயகரமான பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுமாறு நாட்டு மக்களை அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானிய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தைவானை ரிக்டர் அளவில் 7.5ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது.
இதையடுத்து ஜப்பானின் தென் பகுதியிலுள்ள தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
தைவானுக்கு அருகில் இருக்ககூடிய ஜப்பானிய தீவுகளில் 3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழலாம் என்று ஆய்வகம் எச்சரித்தது.
அதன் தேசிய ஒளிப்பரப்பு ஊடகத்தில் “சுனாமி வருகிறது; உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள்” என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.