உலகம்

அமெரிக்காவின் தளங்களை தாக்குவோம் – ஈரான் படைகள் சூளுரை!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் அயெத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டதை தொடர்ந்து புரட்சிகர காவல்படை பதிலடி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அலி கமேனி படுகொலை செய்யப்படும் வரை அவருக்கு மட்டுமே பதிலளித்த படை, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க “பயங்கரவாத தளங்களை” குறிவைத்து தாக்குவோம் என சூளுரைத்துள்ளது. தொடர்புடைய செய்தி  ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு!    

இலங்கை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : விசா காலம் நீட்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28, 2026 முதல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடையலாம். இந்த சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை ஏழு […]

ஐரோப்பா

ஈரான் ஆயுதத் திட்டங்களை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் – ஸ்டாமர் வலியுறுத்து!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் காரணமாக பிராந்திய தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்துள்ளார். டவுனிங் தெருவில் இருந்து  நேற்று  கருத்து வெளியிட்ட அவர் இதனை அறிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரிட்டன் முன்பு செய்தது போல், சர்வதேச சட்டத்தின்படி, பிரித்தானிய தளங்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உயர் மட்டத்திற்கு அதிகரித்துள்ளோம். பிராந்தியத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டினரை  அணுகி, அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த […]

செய்தி

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் : உலக நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி பாதிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. செயற்கைக்கோள் படங்கள் துறைமுகங்களுக்கு அருகில் கப்பல்கள் குவிந்து கிடப்பதைக் காட்டுகின்றன. ஈரானின் புரட்சிகர காவல்படை ஜலசந்தி வழியாக செல்ல வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும் இங்கிலாந்து கடற்படை இந்த உத்தரவுகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்று கூறி எச்சரிக்கையாக […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர்  அயதுல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டிணைந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உச்சத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானின் நகர மையத்தில் உள்ள அவரது வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் 40 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

error: Content is protected !!