ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அச்சம்!
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அவர்களின் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரானில் தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் அவர்கள் மீளவும் வீடு வந்து சேர்வார்களா என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8 ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து ஈரானிய அதிகாரிகள் எம்டி வேலியண்ட் ரோர் (MT Valiant Roar) என்ற எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றினர். துபாயை தளமாகக் கொண்ட பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சியால் […]













