ஆஸ்திரேலியா செய்தி

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு ; ஆஸ்திரேலிய அரசு அதிரடி விசாரணை

  • January 8, 2026
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த மாதம் யூத பண்டிகையின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நாட்டின் உயரிய அதிகாரமிக்க ‘ரோயல் கமிஷன்’ (Royal Commission) விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி (Anthony Albanese) உத்தரவிட்டுள்ளார். 15 பேர் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மற்றும் யூத அமைப்புகளின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வர்ஜீனியா பெல் ( Virginia Bell) […]

இலங்கை செய்தி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு காரணம் போதை? 43% ஓட்டுநர்கள் ஐஸ் பயன்படுத்துவதாக தகவல்

  • January 8, 2026
  • 0 Comments

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களில் 43 சதவீதம் பேர் ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் என ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக   நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் கொழும்பில் 25 சதவீத ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பா

UK கவுன்சில்களில் சைபர் தாக்குதல் – இலட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கலாம்!

  • January 8, 2026
  • 0 Comments

கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியா (Chelsea) கவுன்சிலில் நடந்த சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள்  திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. எதிர்பாராத அழைப்புகள், செய்திகள் மற்றும் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்,  பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்ட தரவின் சிறிய மாதிரிகள், அதில் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது என மேற்கு லண்டன் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. மேலும் கவுன்சில் ஊழியர் எனக் கூறி தனிப்பட்ட தரவுகளை கேட்பவர்கள் தொடர்பிலும் எச்சரிக்கை […]

இலங்கை செய்தி

EPF தொடர்பான ஊடக செய்திகள் தவறானவை – தொழில் அமைச்சகம் விளக்கம்

  • January 8, 2026
  • 0 Comments

ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக  தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வில், EPF மற்றும் ETF நிதிகளின் பங்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஓஷானி உமங்கா ஹப்புஆரச்சி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், EPF ஒரு சமூக பாதுகாப்பு நிதியாக செயல்படுகிறது என்றும், ETF வேறு நோக்கங்களுக்காக இயங்குகிறது என்றும் விளக்கினார். […]

ஐரோப்பா செய்தி

ஹோவிஸ் – கிங்ஸ்மில் இணைப்பு: தீவிரமடையும் விசாரணை

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னணி ரொட்டி நிறுவனங்களான ஹோவிஸ் (Hovis) மற்றும் கிங்ஸ்மில் (Kingsmill) இடையிலான 75 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இணைப்பை, அந்நாட்டின் போட்டி ஆணையம் இன்று முதல் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த இணைப்பால் சந்தையில் போட்டி குறைந்து, ரொட்டியின் விலை அதிகரிக்கக்கூடும் என ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிங்ஸ்மில் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏபிஎஃப் (ABF) பங்குகள் இன்று காலை 11 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன. பிரைமார்க் (Primark) […]

ஐரோப்பா செய்தி

“ட்ரம்ப் யுகம்”: ஐரோப்பிய நாடுகளைச் சாடும் லார்ட் மண்டெல்சன்

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் லார்ட் மண்டெல்சன் (Lord Mandelson), கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரின் எதிர்வினையை “நாடகத்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். “ட்ரம்ப் யுகத்தில்” வெறும் வார்த்தைகளால் மட்டும் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், கடந்த பத்தாண்டுகளில் வழக்கமான இராஜதந்திரம் சாதிக்காததை ட்ரம்ப் ஒரே நாளில் சாதித்துக் காட்டியுள்ளதாகப் புகழ்ந்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் சர்வதேச விதிகளைப் […]

உலகம்

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்!

  • January 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் அல்பே (Albay) மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிமலையை அண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 3000 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாறைகள் அவ்வவ்போது விழுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலையின் பள்ளத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) சுற்றளவில் உள்ள 729 வீடுகளில் இருந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது ஊழல் நிதிப் புகார்

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) தனது சொகுசு பங்களாவை விற்றதில், பாரிய ஊழல் மற்றும் பண மோசடி நடந்திருக்கலாம் என பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கசாக்ஸ்தான் கோடீஸ்வரர் திமூர் குலிபாயேவ் (Timur Kulibayev) , இந்த சொத்தை வாங்குவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு, சந்தை விலையை விட 7 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை ‘கோரெட்டி’ (Goretti) புயல் தாக்கி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புயல் காரணமாக மிட்லாண்ட்ஸ் பகுதியில் சுமார் 30 சென்டிமீட்டர் வரை கனமான பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் காரணமாக சாலைப் போக்குவரத்து, இரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பர்மிங்காம், […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும். இந்நிலையிலேயே […]

error: Content is protected !!