ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்து – பிரான்ஸ் இடையே நேரடி கப்பல் சேவை ஆரம்பம்

  • January 27, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் ரோசைத் (Rosyth) மற்றும் பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகங்களுக்கு இடையே நேரடி சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிற்கு நேரடிப் போக்குவரத்துத் தொடங்குவது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டேனிஷ் நிறுவனமான DFDS (டேனிஷ் சர்வதேச கப்பல் மற்றும் தளவாட நிறுவனம்) இயக்கவுள்ள இந்த 20 மணிநேரப் பயணச் சேவையானது, ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு சுமார் 11.5 மில்லியன் பவுண்டுகள் வருமானத்தை ஈட்டித் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கமல்ஹாசன்- இலங்கை துணை தூதுவர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 27, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனை, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன் மரியாதைப் நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், துணைத் தூதரின் மனைவி கிருத்திகா தேவி மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியா–இலங்கை இடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து

  • January 27, 2026
  • 0 Comments

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தின் போக்குவரத்து இன்று முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் ஓடுபாதையில் பனி குவிந்துள்ளதால், இன்று இயக்கப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் வருகை தர வேண்டிய 25 விமானங்களும், புறப்பட வேண்டிய 25 விமானங்களும் அடங்கும். இதனால், குடியரசு தின விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் விமான […]

உலகம்

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு – டொரெண்டோ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

1999 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகளவிலான பனிப்பொழிவை கனடா சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் நாளை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என டொராண்டோ (Toronto) மாவட்ட பாடசாலை  வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பாடசாலை மற்றும் நிர்வாக தளங்களில் இருந்து பனியை அகற்றும் பணியில் அதன் ஊழியர்களும் ஒப்பந்ததாரர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாடசாலைகள் நாளைய தினம் […]

இலங்கை

பிரபல சட்டத்தரணியின் மகனை காணவில்லை-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

  • January 27, 2026
  • 0 Comments

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜே எம்.லாஹீர் என்பவரின் மகனை காணவில்லை என திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் முக்சித் என்பவர் 26/01/2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார். அவருடைய துவிச்சக்கர வண்டி புத்தகப் பை என்பன இந்து கல்லூரியின் மைதானத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. […]

இந்தியா செய்தி

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ கையெழுத்தானதுl

  • January 27, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுமார் 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று டெல்லியில் எட்டப்பட்டுள்ளது. ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ (Mother of all deals) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தமானது, 200 கோடி மக்கள் தொகையையும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பகுதியையும் கொண்ட ஒரு பிரம்மாண்ட சந்தையை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் […]

உலகம்

சீனா பறக்கிறார் பிரிட்டன் பிரதமர்! புருவத்தை உயர்த்துகிறது ட்ரம்ப் நிர்வாகம்!!

  • January 27, 2026
  • 0 Comments

பிரிட்டன் UK பிரதமர் கியெர் ஸ்டார்மர் Keir Starmer ஜனவரி 28 ஆம் திகதி புதன்கிழமை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் பீஜிங் செல்கின்றார். 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியை, பிரிட்டன் பிரதமர் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் […]

உலகம்

அமெரிக்காவின் போர் விமானங்களை வாங்குவதில் தயக்கம் காட்டும் கனடா! பீட் ஹோக்ஸ்ட்ரா எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

கனடா 88 லாக்ஹீட் மார்ட்டின் ( 88 Lockheed Martin)  F-35 போர் விமானங்களுக்கான ஆர்டரைக் குறைத்தால், வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) ஒப்பந்தம் மாற்றப்படலாம் என்று  அந்நாட்டிற்கான  அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) எச்சரித்துள்ளார். கனடாவின் கொள்முதல் குறைக்கப்பட்டால், கனேடிய வான்வெளியில் அமெரிக்க தலையீடு அதிகரிக்கப்படலாம் என்றும்,  பாதுகாப்பு ஒத்துழைப்பை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த திட்டத்திற்கு 19 பில்லியனில் இருந்து 27 பில்லியன் வரை […]

ஐரோப்பா

பிரித்தானிய காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை அறிவித்த மஹ்மூத்! அதிகாரிகள் குறைய வாய்ப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்  (Shabana Mahmood) நேற்று அறிவித்துள்ளார். இதில் AI மற்றும் நேரடி முக அங்கீகார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்க £140 மில்லியன் முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சீர்த்திருத்தங்களில், CCTV பகுப்பாய்வு,  டிஜிட்டல் தடயவியல் மற்றும் நிர்வாக கடமைகள் போன்ற பணிகளுக்கு AI ஐப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் காவல் நேரங்கள் குறையும் என்றும் இது […]

இலங்கை செய்தி

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் திறப்பு

  • January 27, 2026
  • 0 Comments

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஏனைய மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்திற்குச் சேவைக்கு வரும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலமே, மக்களுக்கான முழுமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.   வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட […]

error: Content is protected !!