ஆஸ்திரேலியா உலகம் செய்தி விளையாட்டு

முன்னாள் டென்னிஸ் வீரரின் அரசியல் பயணம் நிறைவு

  • January 6, 2026
  • 0 Comments

விக்டோரியன் லிபரல் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரருமான சாம் க்ரோத் (Sam Groth), அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது குடும்பத்தினர் மீது பொதுவெளியில் சுமத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்கொண்ட சவால்களே இந்த முடிவிற்குக் காரணம் என அவர் நாடாளுமன்றத்தில் உருக்கமாகத் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு தனது மனைவி மீதான அவதூறுச் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் மதுரோவின் சொத்துக்கள் முடக்கம்

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. சுவிஸ் பெடரல் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அந்நாடு குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தத் தடையானது தற்போதைய வெனிசுலா அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும், முடக்கப்பட்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரிட்டன் அமைச்சரின் பகீர் எச்சரிக்கை

  • January 6, 2026
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) கைது செய்யப்பட்டிருப்பது, சர்வதேச சட்டங்களின் வீழ்ச்சியைக் காட்டுவதாக பிரட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்டிரீட்டிங் (Wes Streeting) எச்சரித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ‘சர்வதேச விதிகள் சிதைந்து வருவது பிரிட்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்’ எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ, தன் மீதான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புதிய கார் பதிவு 02 மில்லியனை கடந்தது – மின்சார வாகனங்கள் குறித்து எச்சரிக்கை

  • January 6, 2026
  • 0 Comments

தொற்றுநோய்க்குப் பிறகு முதன் முறையாக, கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (SMMT) தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் இது ஒரு நல்ல முன்னேற்றம் என சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் ஹாவ்ஸ்,பாராட்டியுள்ளார். ஆனால், மின்சார கார் விற்பனை அரசு நிர்ணயித்த இலக்குகளை எட்டும் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் விற்பனை 5.9% உயர்வு

  • January 6, 2026
  • 0 Comments

பிரிட்டனின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான நெஸ்ட் (Next), இந்த ஆண்டு தனது லாபம் 1.1 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விற்பனை எதிர்பார்த்ததை விட 5.9 சதவீதம் அதிகரித்ததே இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஆன்லைன் விற்பனை 38 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. இதன் எதிரொலியாக லண்டன் பங்குச்சந்தையின் FTSE 100 குறியீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

உறைபனி எச்சரிக்கை: பிரித்தானியாவில் இன்று 1,000 பாடசாலைகள் மூடல்!

  • January 6, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் வானிலை மாற்றத்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெப்பமூட்டும் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகப் பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் பாதிப்புக்குள்ளான இடங்கள்: வேல்ஸில் (Wales) மற்ற பகுதிகளை விட பாதிப்பு மிக அதிகம். இன்று மட்டும் 380-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்து (Northern Ireland) சுமார் 186 […]

ஐரோப்பா செய்தி

சாலை பாதுகாப்பு திட்டங்கள் : பிரித்தானியர்களுக்கு அவசியமாகும் பரிசோதனை!

  • January 6, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வரும் புதிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள்களுக்கு கட்டாய கண் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் நாளைய தினம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் வயதானவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் வீதி விபத்துக்களை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள் வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளை 65 சதவீதமாக குறைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த […]

உலகம்

பாகிஸ்தானில் இயங்கும் போராளிக் குழு சுற்றிவளைப்பு – இந்தியா மீது குற்றச்சாட்டு!

  • January 6, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் – கராச்சியில் BLA போராளிக் குழுவினரின் மறைவிடங்களை தாக்கியதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இராணுவ நடவடிக்கையின்போது 03 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சுமார் 2 டன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி சுல்பிகர் அலி லாரிக் (Zulfiqar Ali Larik) மற்றும் துணை காவல் துறை அதிகாரி ஜெனரல் குலாம் அஸ்பர் மகேசர் (Ghulam Azfar Mahesar) ஆகியோர் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். […]

இலங்கை

மொரவெவ பிரதேச சபைக்கு கள விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்!

  • January 6, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கு உடபட்ட பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர கள விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன் முதற்கட்டமாக மொரவெவ பிரதேச சபையின் வருமானம் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் அந்த வருமானத்தை அதிகரிப்பது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் பல்வேறுபட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோது அங்கு […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததன் பின்னர்,  தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,461 ஆக பதிவாகியுள்ளது. உலக தங்க விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை  3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” பவுண் ஒன்றின் விலை  337,600 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 1 […]

error: Content is protected !!