ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 2026 இல் முதல் பெயரிடப்பட்ட புயல் – கோரெட்டி

  • January 6, 2026
  • 0 Comments

பிரான்ஸ் வானிலை ஆய்வு சேவையால் பெயரிடப்பட்ட புயல் “கோரெட்டி” (Goretti), பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பெயரிடப்பட்ட புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலை நெருங்கி வருவது குறித்து பொதுமக்களுக்கு தெளிவான மற்றும் உத்தியோகப்பூர்வ தகவல்களை வழங்குவதே புயல்களுக்கு பெயரிடுவதன் முக்கிய நோக்கம் என அந்த வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. எளிதில் அடையாளம் காணக்கூடிய பெயர் பயன்படுத்தப்படுவதால், ஊடகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து தகவல்களை பகிர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அபாயங்களை புரிந்துகொண்டு, தகுந்த […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான தீர்வையும் வழங்குக!

  • January 6, 2026
  • 0 Comments

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் S. Siritharan வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த […]

உலகம் செய்தி

அமெரிக்கா–டென்மார்க் மோதல் தீவிரம்: நேட்டோவில் புதிய பதற்றம்

  • January 6, 2026
  • 0 Comments

நேட்டோ மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தைப் பாதுகாக்க கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller) தெரிவித்துள்ளார். சி.என்.என் (CNN) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் யாரும் போரிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனம் இப்போது கிரீன்லாந்து பக்கம் […]

உலகம்

இந்தோனேசியாவில் கொட்டித் தீர்த்த மழை – 16 பேர் உயிரிழப்பு, அவசரகால நிலை அமுலில்!

  • January 6, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். தற்போது ஆரம்பமாகியுள்ள பருவ மழையால் சியாவ் டகுலாண்டாங் பியாரோ (Siau Tagulandang Biaro) மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக  தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி  (Abdul Muhari) கூறினார். பேரழிவிற்குள்ளான கிராமங்களுக்கு காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் அவசர மீட்புப் பணியாளர்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சுமார் நான்கு […]

இலங்கை செய்தி

யாழில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்

  • January 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மாத்திரம் ஆறு பெண்கள் திருமணமாகாத நிலையில் கர்ப்பம் தரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, அதே காலப்பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 9 குடும்ப வன்முறைச் சம்பவங்களும் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக மட்டத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் […]

இந்தியா செய்தி பொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜன நாயகன்’: தணிக்கைச் சான்றிதழ் வழக்கில் நாளை இறுதி முடிவு

  • January 6, 2026
  • 0 Comments

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் 9-ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. கடந்த மாதம் 19-ஆம் திகதி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத் தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, […]

இலங்கை செய்தி

2026 – விசேட போக்குவரத்து கண்காணிப்பு உத்திகளை அறிமுகப்படுத்தியது இலங்கை பொலிஸ்

  • January 6, 2026
  • 0 Comments

அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், 2026 ஆம் ஆண்டிற்கான விசேட போக்குவரத்து கண்காணிப்பு உத்திகளை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விபத்துக்கள் இலங்கை பொலிஸுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளதாகவும், இது சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் என அனைவரையும் பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நாடு […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது ஏன்? பிரதமர் விளக்கம்!

  • January 6, 2026
  • 0 Comments

அவசரகால சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Harini Amarasooriya தெரிவித்தார். அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும். இதற்குரிய பணிகளை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்பதற்காகவும், […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மானிய விதிகளில் முக்கிய மாற்றம்

  • January 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மானிய விதிகளில் இன்று முதல் மிகமுக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, மானியத்திற்கு தகுதியுள்ள அனைத்து குடும்பங்களும், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தது 72 மணிநேர மானிய விலையிலான பராமரிப்பைப் பெற முடியும். குறிப்பாக, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசி குழந்தைகளுக்கு இனி பதினைந்து நாட்களுக்கு 100 மணிநேர மானியம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடினமான ‘செயல்பாட்டுத் தேர்வை’ நீக்கிவிட்டு, எளிய நடைமுறையை அரசு கொண்டு […]

உலகம்

வெனிசுலா விவகாரம் – அமைதி காக்கும் உலக நாடுகள் : விளக்கம் கோரும் ஐ.நா சபை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீடு சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை  வெனிசுலாவில் நிலைமைகளை மோசமாக்கும் என்றும், சக்திவாய்ந்த நாடுகள் தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அஞ்சுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உள்ளிட்ட பல தலைவர்கள் […]

error: Content is protected !!