இந்தியா செய்தி

ஆட்கடத்தல் – மும்பையில் 80 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயம்

  • December 14, 2025
  • 0 Comments

இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 சிறுவர்கள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர். இந்த சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு பொலிஸ் […]

உலகம் செய்தி

இங்கிலாந்தின் டோர்செட்டில் வாகன விபத்து – இருவர் உயிரிழப்பு

  • December 14, 2025
  • 0 Comments

தென்மேற்கு இங்கிலாந்தில் டோர்செட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கார்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பூல் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 57 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் இரண்டு வாகனங்களிலும் பயணிகள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

பேராதனை புகையிரதப் பாலத்தின் சேத மதிப்பீடு பணிகள் ஆரம்பம்

  • December 14, 2025
  • 0 Comments

பேராதனையில் அமைந்துள்ள புகையிரதப் பாலத்தைத்தின் சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகம், புகையிரத திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், கட்டிட ஆய்வுமையம் உற்பட பல நிறுவனங்க் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த பாலம் 1897ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்துடன் இதன் நீளம் 348 அடிகளாகும், மேற்படி பாலத்தை திருத்தி அமைத்தல் அல்லது முற்றாக மாற்றி அமைத்தல் பற்றிய […]

உலகம் செய்தி

வேல்ஸ் திட்டம்- வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என பிரித்தானிய அரசு அறிவிப்பு

  • December 14, 2025
  • 0 Comments

வேல்ஸ் அரசாங்கத்தை தவிர்த்து வேல்ஸில் முன்னெடுக்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டம், வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. நகர மைய மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வேல்ஸில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை பிரித்தானிய அரசு தானே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு அயர்லாந்துக்கு வழங்கப்படும் நிதியை, அங்குள்ள நிர்வாகக் குழுவே முழுமையாக கட்டுப்படுத்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, வேல்ஸ் அமைச்சர்களைத் தாண்டி அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக கூறி, […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இந்தியாவிலிருந்து இன்றும் 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள் நாட்டிற்கு

  • December 14, 2025
  • 0 Comments

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 சரக்கு விமானம் இன்று (14.12) பிற்பகல் 3 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. பேரிடர் நிவாரணப் பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்கிய பின்னர், நாட்டின் மஹியங்கனை பகுதியில் கள வைத்தியசாலையை அமைத்து சேவைகளை முன்னெடுத்த 85 பணியாளர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணங்களின் இருப்புடன் […]

இந்தியா செய்தி

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மோடி கண்டனம்

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பொன்டி (Bondi) கடற்கரையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றது. தாக்குதல் நடத்திய இருவர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் பொன்டி […]

உலகம் செய்தி

அவுஸ்திரலியா: கடற்கரை தாக்குதலில் பயங்கரவாதியைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட நபர்

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, ​​தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தையும், பழக்கடை உரிமையாளருமான 43 வயது அஹமது அல் அஹ்மத் (Ahmed El Ahmad) ஒரு வீரனாகப் பாராட்டப்படுகிறார். அஹமது அல் அஹ்மத், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை துணிச்சலுடன் நிராயுதபாணி ( disarming) ஆக்கியதை அடுத்து, இரண்டாவது துப்பாக்கிதாரியால் இரண்டு முறை சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஹ்மத், […]

உலகம் செய்தி

லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களுக்கு திட்டமிடும் ட்ரம்ப்!

  • December 14, 2025
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர் வழியாக வரும் 96 சதவீத போதைப்பொருட்களை நாங்கள் முறியடித்தோம், இப்போது நாங்கள் நிலம் வழியாக தாக்குதல்களை தொடங்குகிறோம். நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது, அது நடக்கப்போகிறது. நமது நாட்டிற்கு போதைப்பொருட்களைக் […]

உலகம் செய்தி

சிட்னி துப்பாக்கிச்சூடு : பயங்கரவாத தாக்குதலாக விபரிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா – சிட்னியின் போண்டி (Bondi Beach) கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்   12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதனை பயங்கரவாத தாக்குதலாக அடையாளப்படுத்திய காவல்துறையினர் ஹனுக்கா (Hanukkah) பண்டிகையை கொண்டாடும் யூத குடும்பங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில்  கார் ஒன்றில் இருந்து வெடிப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டாவது […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் செய்தி

டிக்டாக் விற்பனை காலக்கெடு நீட்டிக்குமா? முதலீட்டாளர்கள் குழப்பம்.

  • December 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளை அதன் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance) விற்க வேண்டும் என்ற காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படவிருக்கும் நிலையில். அதை வாங்குவதற்குத் தயாராக உள்ள அமெரிக்க முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பில்லியனரும், முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் (los angeles dodgers) உரிமையாளருமான ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt), இந்தக் காலதாமதத்தால் தான் காத்திருக வேண்டி இருப்பதாகப் பிபிசி-யிடம் தெரிவித்தார். அவர் தனது ப்ராஜெக்ட் லிபெர்ட்டி ( ‘Project Liberty’) என்ற திட்டத்தின் […]

error: Content is protected !!