உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

  • December 20, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. மைமென்சிங்(Mymensingh) நகரில் வியாழக்கிழமை கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஏழு நபர்களை விரைவு நடவடிக்கை பட்டாலியன்(RAB) கைது செய்துள்ளதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு […]

ஐரோப்பா செய்தி

UKவில் குற்றவாளியை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு 20000 பவுண்ட்ஸ் வெகுமதி அறிவிப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் வடக்கு லண்டனில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த நபரை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு, 20000 பவுண்ட்ஸ் வெகுமதி வழங்கப்படும் என பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் 20 ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு டோட்டன்ஹாமில் (Tottenham ) உள்ள வேவர்லி (Waverley) சாலையில் 27 வயதான மஹத் அப்தி முகமது (Mahad Abdi Mohamed) என்ற இளைஞர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரி தப்பிச் சென்ற நிலையில் மார்ச் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்- பொதுமக்களின் கருத்து கோரல்

  • December 20, 2025
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்குமாறு பொதுமக்களிடம் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். புதிய சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம் என தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்ததைச் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணிக்கு 435 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

  • December 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – தாக்குதல்தாரியை எதிர்கொண்ட நபருக்கு 2.5 மில்லியன் பரிசு!

  • December 20, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது தாக்குதல் தாரி ஒருவரை தைரியமாக எதிர்கொண்ட கடை உரிமையாளருக்கு 2.5 மில்லியன் (£1.24 மில்லியன்) ஆஸ்திரேலிய டொலருக்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை மருத்துவமனையில் வைத்து அவரிடம் இந்த காசோலை கையளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்குவதற்கு முன்பு, அகமது அல் அகமது என அழைக்கப்படும் நபர் காரின் பின்னால் மறைந்திருந்து தாக்குதல்தாரியை எதிர்கொண்டார். இதனை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தன. […]

உலகம் செய்தி

பங்களாதேஷில் கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது – சசி தரூர் கண்டனம்

  • December 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் தற்போது இருப்பது போன்ற கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாட்னா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘இந்தியா, பங்களாதேஷுடன் நல்லுறவை விரும்புகிறது என்பதையும், அங்கு அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியுள்ளது. பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸ் எல்லையில் புலம்பெயர்ந்தோருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல்!

  • December 20, 2025
  • 0 Comments

பிரான்ஸில் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஆங்கிலக்கால்வாயை கடக்க முற்பட்ட  நிலையில் பிரான்ஸ் காவல்துறையினருக்கும், குடியேறிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 700 குடியேறிகள் சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் காவல்துறையினர் புலம்பெயர்ந்தோர் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 41000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டை மீட்க முழு ஆதரவு: அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி!

  • December 20, 2025
  • 0 Comments

“ டித்வா சூறாவளியை சாதாரணமான விடயமாகக் கருதக்கூடாது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) வலியுறுத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தவேளையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “ பொறுப்பற்ற – கேலிக்கையான பார்வைகளால் தான், சுனாமியிலிருந்து கூட எம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்றளவிலும் “ டாப்ளர் […]

அரசியல் இலங்கை செய்தி

31 ஆம் திகதிக்குள் செய்து முடிங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

  • December 20, 2025
  • 0 Comments

“ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் – தகாத நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருக்கு எதிராக எதையும் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் எந்த விசாரணையிலும் பங்கேற்கவில்லையென்றும் Walliams இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மற்றும் அவர் மீதான தகாத நடத்தை குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். ஹார்பர்காலின்ஸ் UK, புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் […]

error: Content is protected !!