உலகம் செய்தி

ஜெருசலேமில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் தலைவர்களை சந்திக்கும் நெதன்யாகு

  • December 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu), ஜெருசலேமில்(Jerusalem) கிரேக்க(Greek) பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ்(Kyriakos Mitsotakis) மற்றும் சைப்ரஸ்(Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ்(Nikos Christodoulides) ஆகியோரை சந்திக்க உள்ளார் என்று இஸ்ரேலின் அருட்ஸ் ஷேவா(Arutz Sheva) ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரு தலைவர்களுடனும் தனி தனி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். துருக்கியின்(Turkey) விரிவடைந்து வரும் இராணுவ நிலைப்பாடு குறித்து ஏதென்ஸில்(Athens) அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், கிழக்கு மத்தியதரைக் […]

செய்தி

பொறுப்புகளை நிறைவேற்றினாலே நாடு முன்னேறும்: ஜனாதிபதி உரை

  • December 21, 2025
  • 0 Comments

தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் பணிகள் மகத்தானவை சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிக்கிறேன் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் […]

இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் 4 வயது மகனை கொன்ற நபர்

  • December 21, 2025
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில்(Uttar Pradesh) குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது நான்கு வயது மகனை அடித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சூரியவான்(Suriyawan) பகுதியில் உள்ள குவாலி(Kuvali) கிராமத்தில் இரவு இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராம்ஜி வான்வாசி(Ramji Vanvasi) குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த தனது 4 வயது மகன் விகாஸை(Vikas) தூக்கி பல முறை தரையில் அடித்து தப்பி ஓடிவிட்டதாகவும் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

  • December 21, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் விரைவு நடவடிக்கை பட்டாலியன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, மைமென்சிங்(Mymensingh) நகரில் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம்

  • December 21, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின்((Uttar Pradesh) பரேலி-பிலிபிட்(Bareilly-Pilipit) நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஹபீஸ்கஞ்ச்(Hafizganj) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சித்ரா(Chitra) கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நவாப்கஞ்ச்(Nawabganj) பக்கத்திலிருந்து வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பிரேம்பால்(Prempal) மற்றும் 17 வயது சுனில் குமார்(Sunil […]

செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

  • December 21, 2025
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில்(Dubai) நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில்(United Arab Emirates) நடைபெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில், அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ்(Sameer […]

ஐரோப்பா செய்தி

மியாமியில் (Miami) இடம்பெறும் அமைதி பேச்சுவார்த்தை – உக்ரைனின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?

  • December 21, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மியாமியில் (Miami) ஆக்கபூர்வமாக நடந்து வருவதாக புடினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  ஐரோப்பிய பங்காளிகளுடன் பரந்த ஆலோசனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. உக்ரைன் ஜனாதிபதி , போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்க ஜனாதிபதி தீவிர பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைதியை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ஆற்றலையும் […]

ஐரோப்பா செய்தி

UKவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

  • December 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டில்  சராசரியாக £436 பவுண்ட்ஸை வட்டியாக பெறுவார்கள் என நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. கட்டிட சங்கம் (biggest building society) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாட்டில் உள்ள பெரியவர்கள் வரும் ஆண்டில் சராசரியாக £7,535 பவுண்ட்ஸ் சேமிப்பார்கள் எனக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக மக்களின் சேமிப்பு விருப்பங்களை அளவிடுவதற்காக இங்கிலாந்து முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து […]

ஐரோப்பா செய்தி

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் ஸ்டார்மரே பிரதமர் – ட்ரெவர் பிலிப்ஸ்

  • December 21, 2025
  • 0 Comments

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் கெய் ஸ்டார்மரே (Keir Starmer) பிரதமராக இருப்பார் என சமூக மற்றம் சமத்துவ நிபுணர் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல கடினமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் பிலிப்ஸ் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது மக்கள் மீட்சியைக் காணத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கடந்த ஆண்டு வாக்களித்த மாற்றத்தின் நன்மைகளை புதிய ஆண்டில், உணர்வார்கள் என்றும் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அவர் தொழிற் கட்சியின் அன்னா […]

இந்தியா செய்தி

டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 110 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளன. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலவி வரும் நிலையில் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் அறிவிப்பில் […]

error: Content is protected !!