ஐரோப்பா

காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது!

  • December 23, 2025
  • 0 Comments

காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) லண்டனில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பதாகையை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 13 இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் உள்ள சிறைக் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கிரேட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா உலகம் செய்தி

லாவோஸில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: மூவர் மாயம்

  • December 23, 2025
  • 0 Comments

லாவோஸின் மேகொங் நதியில் (Mekong River) 140-க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகு பாறையில் மோதி கவிழ்ந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹுவே சாய் (Huay Xay) நகரிலிருந்து லுவாங் பிரபாங் (Luang Prabang) நோக்கிச் சென்ற இந்தப் படகில் 118 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 29 உள்ளூர் மக்களும் பயணித்துள்ளனர். விபத்தின் போது போதிய உயிர்காப்பு அங்கிகள் (Life jackets) இல்லாததால் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். இதில் காணாமல் போன லாவோஸ் பெண் ஒருவரினதும், ஒரு வயதுக் […]

இலங்கை செய்தி

மீள்கட்டுமான நிதியத்திற்கு ப்ரைம் லாண்ட் (Prime Land) நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை

  • December 23, 2025
  • 0 Comments

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. ப்ரைம் லாண்ட் (Prime Land) குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று கையளித்தனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஜெய்சங்கரை சந்தித்த மலையக அரசியல் தலைவர்கள் -நிலத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தல்

  • December 23, 2025
  • 0 Comments

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார். பேரழிவுக்குப் பின்னரான மீட்பு முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணத்தை அறிவித்ததற்காக அமைச்சர் ஜெய்சங்கருக்கு தூதுக்குழு இதன்போது நன்றி தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 23, 2025
  • 0 Comments

“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார். “ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது. அனர்த்த நிலைமையில் […]

இலங்கை செய்தி

உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்ய வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு

  • December 23, 2025
  • 0 Comments

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து சரியான பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தின் போது, புதிய கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களுக்காக நிதி கோரப்பட்டதை அவதானித்த ஆளுநர், “ஏற்கனவே பல […]

உலகம் செய்தி

300 வருடமாக கிரீன்லாந்தை ஆய்வு செய்யும் அமெரிக்கா – ட்ரம்பின் சர்ச்சைக் கருத்து!

  • December 23, 2025
  • 0 Comments

கீரின்லாந்தை ட்ரம்ப் கையகப்படுத்த முயற்சிப்பதை  டென்மார்க் தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்ற நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பிற்கு அந்தத் தீவு மிகவும் முக்கியமானது என்று விவரித்த அவர், சுமார் 300  ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா கிரீன்லாந்தை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு அது தேவை” என்று மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்  ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அந்த […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் என்.பி.பி.க்கு தோல்வி: அடுத்து என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீண்டும் முன்வைக்க […]

இலங்கை செய்தி

அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர்

  • December 23, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே அலரி மாளிகையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக ஜெய்சங்கர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். டிட்வா புயல் காரணமாக நாடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்ட அவரது உத்தியோகப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் ஹரிணியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் நாட்டில் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான […]

உலகம் செய்தி

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – உலக நாடுகளின் அழுத்தம் போதாது என செலென்ஸ்கி குற்றச்சாட்டு

  • December 23, 2025
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது 600 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30 ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதல் மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மத்திய சைட்டோமிர் (zhytomyr) பகுதியில் நான்கு வயது குழந்தை உட்பட சுமார் மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது உலக நாடுகள் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லையென்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸை நெருங்கும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் அவசர மின் தடைகள் […]

error: Content is protected !!