அரசியல் இலங்கை செய்தி

சிறிதரன் எம்.பியை கைது செய்யவேண்டாமென அரச உயர்மட்டத்திலிருந்து உத்தரவு?

  • December 23, 2025
  • 0 Comments

“யாழ் தையிட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (sivagnanam shritharan) கைது செய்யப்படதாது ஏன்?” அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் இன்று (23) கேள்வி எழுப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்ட பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. இதன்போது தையிட்டியில் நடந்த போராட்டம் தொடர்பிலும் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் மீளப் பெறப்படும் இறால் பக்கற்றுக்கள் – அவசர அறிவிப்பு!

  • December 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள இறால் பக்கற்றுக்கள்  மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 83,800 உறைந்த இறால்  பக்கற்றுக்கள்   அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வாட்டர்ஃபிரண்ட் (Waterfront) மற்றும் பிஸ்ட்ரோ பிராண்ட் (Bistro brand) என்ற பெயர்களில்  விநியோகம் செய்யப்பட்டுள்ளன. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புடன் தொடர்புடைய எந்த நோய்களும் இன்றுவரை பதிவாகவில்லை என்பதை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்ட இறாலை வாங்கிய நுகர்வோர் அதை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மீள […]

இலங்கை செய்தி

புதுடில்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்

  • December 23, 2025
  • 0 Comments

இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.எஸ். ஜெய்சங்கர், தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து இந்தியாவின் புதுடில்லிக்கு புறப்பட்டார். இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட பல தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்பின்னர் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரிகள் குழு, சந்தோஷ் ஜா உட்பட, இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழுவும், ஜெய்சங்கர் விடைபெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் […]

உலகம் செய்தி

மீண்டும் கடத்தல்: நைஜீரியாவில் 28 பேர் மாயம்

  • December 23, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் பிளாட்டோ (Plateau) மாநிலத்தில், வருடாந்த இஸ்லாமிய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகப் பேருந்தில் பயணித்த 28 பேர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கிராமங்களுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்தபோது, இந்த பேருந்தை வழிமறித்த கும்பல், அதில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரையும் கடத்திச் சென்றுள்ளது. தற்போது கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தலா 1.5 மில்லியன் நைரா (Naira) பிணைத்தொகை கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றில் கடத்தப்பட்டிருந்த 130 மாணவர்கள் விடுவிக்கப்பட்ட மறுதினமே இந்தச் […]

ஐரோப்பா செய்தி

எடின்பர்க்கில் (Edinburgh) இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் லொறியுடன் மோதி விபத்து!

  • December 23, 2025
  • 0 Comments

எடின்பர்க்கில் (Edinburgh) இருந்து ஃபாரோவுக்குச் (Faro) சென்ற ரியானேர் விமானம்  (Ryanair flight) எரிபொருள் லொறியுடன் மோதி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737-8 விமானத்தின் இறக்கை முனை வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும்,  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் திட்டமிடப்பட்ட புறப்பாடு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

உலகம் செய்தி

இஸ்ரேலில் ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடு: வெளிநாட்டுச் சேனல்களை முடக்க புதிய சட்டம்

  • December 23, 2025
  • 0 Comments

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டு ஊடகங்களை முடக்கும் அதிகாரத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது. ‘அல்-ஜசீரா சட்டம்’ (Al Jazeera Law) என்று அழைக்கப்படும் இந்த விதியானது, இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கு, நீதிமன்ற உத்தரவு இன்றியே எந்தவொரு வெளிநாட்டு ஊடகத்தையும் தடை செய்ய அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது. அமைதிக் காலத்திலும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இஸ்ரேலிய ராணுவத்தினால் நடத்தப்படும் ‘ஆர்மி ரேடியோ’ (Army Radio) நிலையத்தை மூடுவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை […]

உலகம்

அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்க பொருளாதாரம்

  • December 23, 2025
  • 0 Comments

அமெரிக்கப் பொருளாதாரம், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் செலவுகள் உயர்வடைந்து ஏற்றுமதிகள் அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், கடந்த காலாண்டில் 3.8% வளர்ச்சி வீதத்தில் இருந்துள்ளது. ஆனால் புதிய புள்ளிவிபரங்களின் படி 4.3% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் குறிப்பதாகவும் அமெரிக்க […]

உலகம் ஐரோப்பா செய்தி

விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்தது பிரித்தானிய அரசு: பண்ணை வரி வரம்பில் அதிரடி மாற்றம்

  • December 23, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விவசாய நிலங்களுக்கான பரம்பரை வரி விதிப்பில், ஒரு மில்லியன் பவுண்டுகளாக இருந்த வரி விலக்கு வரம்பை 2.5 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 14 மாதங்களாக விவசாயிகள் முன்னெடுத்து வந்த தொடர் போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களைத் தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த வரி மாற்றத்தின் மூலம், சாதாரண குடும்பப் பண்ணைகள் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) […]

ஐரோப்பா செய்தி

வாகன விபத்தில் லண்டன் சிறுவன் பலி – ஐவர் வைத்தியசாலையில்

  • December 23, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் பீட்டர்பரோ அருகே A1 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து 02 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவித்துள்ளது. லண்டனைச் சேர்த்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் டொயோட்டா காரில் பயணித்த லண்டனைச் சேர்ந்த மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய சந்தேகத்தின் பேரில் 64 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மார்ச் 20 வரை பிணையில் […]

இலங்கை செய்தி

பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு முதற்கட்ட நிவாரணம் – 106 மில்லியன் ரூபா வெளியிடப்பட்டது

  • December 23, 2025
  • 0 Comments

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் 106.2 மில்லியன் ரூபா நிதியை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட 531 பதிவுசெய்யப்பட்ட தொழிலதிபர்கள் தலா 200,000 ரூபாவை மானியமாகப் பெறுவார்கள் என தொழில்துறை துணை அமைச்சரின் செயலாளர் தெரிவித்தார். இதற்மைய கம்பஹா, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்ட […]

error: Content is protected !!