அரசியல் இலங்கை செய்தி

பிணையில் வந்தகையோடு என்.பி.பி. அரசுக்கு அர்ச்சுனா சிவப்பு எச்சரிக்கை!

  • December 24, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் ஓராண்டுக்குள் கவிழும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna). கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு பிற்பகல் பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஏனைய சபைகளிலும் இந்நிலைமை ஏற்படலாம். முல்லைத்தீவிலும் என்.பி.பி. ஆட்சிக்கு பின்னடைவு […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யா – கையெழுத்தான ஒப்பந்தம்!

  • December 24, 2025
  • 0 Comments

ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில்  அணு மின் நிலையமொன்றை  நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம்,  சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு கூட்டு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது.  தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக உள்ளது. ஆகஸ்ட் 2023 இல் ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தை ஏவியது. இருப்பினும் […]

அரசியல் இலங்கை செய்தி

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை: சஜித் சுட்டிக்காட்டு!

  • December 24, 2025
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார். ஹெம்மாத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் […]

உலகம் செய்தி

சிரியாவில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

  • December 24, 2025
  • 0 Comments

சிரியாவில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற தற்கொலைக்கு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. எலியாஸ் (Elias) தேவாலய உறுப்பினர்கள் திருப்பலியை நடத்தி,   விளக்குகளால் ஆன மரத்தில் இறந்தவர்களின் படத்தினை தொங்கவிட்டப்படி அந்த மரத்தை ஒளிரச் செய்துள்ளனர். இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு படையினர் உதவி செய்ததுடன், பலத்த பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர். கடந்த ஜுன் மாதம் டமாஸ்கஸின் (Damascus) புறநகரில் உள்ள ட்வீலாவில் (Dweil) உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ஏறக்குறைய […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது!

  • December 24, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டிற்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 39 வயதான மார்ட்டின் க்ளின் (Martin Glynn) என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று  பெர்த் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய வீட்டை சோதனை செய்ததில் பல துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வெடிகுண்டுப் பொருட்களை கொள்வனவு செய்தமைக்கான பட்டியல் கிடைக்கப்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து வந்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஆஸ்திரேலிய அரசாங்கத்தால்  பயங்கரவாதக் […]

உலகம்

மிரட்டி பணம் பறித்த அமெரிக்கா : வெனிசுலா முன்வைத்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு!

  • December 24, 2025
  • 0 Comments

நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்கா மிரட்டி பணம் பறித்ததாக வெனிசுலா  குற்றம் சாட்டியுள்ளது. வொஷிங்டன் வெனிசுலாவின் இரண்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியது “கடற்கொள்ளையை விட மோசமானது” என்று ஐ.நா.வுக்கான வெனிசுலா தூதர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே  வெனிசுலாவின் மூன்றாவது  எண்ணெய் டேங்கரைத் துரத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro)  போதைப்பொருள் கும்பலை வழிநடத்துவதாகவும், கும்பல்கள் நீண்ட காலமாக தண்டனையின்றி செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் […]

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது எகிப்து!

  • December 24, 2025
  • 0 Comments

இலங்கை(Sri Lanka), எகிப்து ( Egypt ) ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ( Defence) மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான எகிப்து தூதுவருக்கும் (Adel Ibrahim), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் (Major General Aruna Jayasekara) இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (23) நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் எகிப்து […]

ஐரோப்பா செய்தி

போரில் முன்னேறி வரும் ரஷ்யா : கிழக்கு நகரை இழந்த உக்ரைன்!

  • December 24, 2025
  • 0 Comments

உக்ரைனுடனான போரில் ரஷ்யா முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு நகரமான சிவர்ஸ்கில் (Siversk) இருந்து உக்ரேனிய துருப்புக்கள் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய இராணுவம், எங்கள் வீரர்களின் உயிரையும், பிரிவுகளின் போர் திறனையும் பாதுகாக்க” செயல்பட்டதாக கூறியுள்ளது. இதற்கிடையே உக்ரைன் வசம் எஞ்சியுள்ள  டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் அமையப் பெற்றுள்ள இரண்டு நகரங்களையும் ரஷ்ய படையினர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் நெருங்கி வருகின்ற நிலையிலும் […]

இந்தியா செய்தி

அசுர பலத்தில் திமுக கூட்டணி; அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு

  • December 24, 2025
  • 0 Comments

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள், இந்த ஆதரவு முடிவை அறிவித்தனர். தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பை, கடந்த […]

இந்தியா உலகம் செய்தி

ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக இணையம்; ‘ப்ளூ பேர்ட்’ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோ

  • December 24, 2025
  • 0 Comments

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ப்ளூ பேர்ட் 6’ (BlueBird 6) ஐ ‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 8:55 மணிக்கு விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், சுமார் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் சுமந்து சென்றது. இதுவே இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். பூமியில் இருந்து 520 […]

error: Content is protected !!