உலகம் செய்தி

வங்கதேச வன்முறை – ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை

  • December 24, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட திப்பு சந்திர தாஸ்(Dipu Chandra Das) என்ற இந்து இளைஞரின் கொலையை உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் சட்டமியற்றுபவர்களும் கண்டித்து வருகின்றனர். அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(Antonio Guterres) கவலை தெரிவித்துள்ளார். “வங்காளதேசத்தில் நாம் கண்ட வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்,” என்று குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்(Stephane Dujarric) ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 30 இந்தியர்கள் கைது

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவில்(America) சட்டவிரோதமாக வசித்து, வணிக ஓட்டுநர் உரிமங்களுடன் லாரிகளை இயக்கும் 30 இந்தியர்களை அமெரிக்க எல்லை ரோந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கலிபோர்னியாவின்(California எல் சென்ட்ரோ செக்டரில்(El Centro sector) உள்ள எல்லை ரோந்து அதிகாரிகள், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாகன நிறுத்தங்களின் போது வணிக ஓட்டுநர் உரிமங்களுடன் 49 சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்ததாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு(CBP) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவைச்(India) சேர்ந்தவர்கள், இருவர் […]

இந்தியா செய்தி

தெலுங்கானாவில் குழந்தைகளை விற்பனை செய்த மோசடி கும்பல் கைது

  • December 24, 2025
  • 0 Comments

தெலுங்கானாவில்(Telangana) உள்ள சைபராபாத்(Cyberabad) சிறப்பு நடவடிக்கைக் குழு, லட்சக்கணக்கான ரூபாய்க்கு மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளது. “இந்தக் குழந்தைகள் பிறந்து சில நாட்களே ஆகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மாதப்பூர்(Madhapur) காவல் அதிகாரி ரித்திராஜ்(Rithiraaj) தெரிவித்துள்ளார். இந்தக் கும்பல் முதன்மையாக பணக்கார குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து ஒவ்வொரு குழந்தையும் சுமார் ரூ.15 லட்சத்திற்கு விற்றுள்ளது. இந்த […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • December 24, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடாத ஒல்லி போப்(Ollie Pope) மற்றும் காயம் காரணமாக ஜோப்ரா […]

இலங்கை

அம்பலாங்கொடையில் தற்செயலாக பாய்ந்த துப்பாக்கிக்குண்டு – கான்ஸ்டபிள் படுகாயம்!

  • December 24, 2025
  • 0 Comments

அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில்  கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த கான்ஸ்டபிள் இன்று தனது சர்வீஸ் துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, ​​தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக  கூறப்படுகிறது. இதனால் காலில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் பெரிதாக இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் நடந்த சூழ்நிலையை அறிய காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

UKவில் 04 நாள் வேலை வாரம் சாத்தியமா? : முழுநேர ஊதியத்தை பெறுவதற்கு எதிர்ப்பு!

  • December 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரங்களை அமுல்படுத்துவதற்கு எதிராக  கவுன்சில் தலைவர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கான வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) இந்த விடயம் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலைக்கு முழு வார ஊதியத்தைப் பெற்றால் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகக் கருதப்படலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் உள்ளூர் அதிகாரிகள் “பகுதிநேர வேலைக்கு முழுநேர ஊதியம்” வழங்கக்கூடாது என்றும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை!

  • December 24, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பருவக்கால காய்ச்சல் அதிகரித்து வருகின்ற நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று முன்னணி மருத்துவ அமைப்புகள்  வேண்டுகோள் விடுத்துள்ளன. சராசரியாக தினமும் 3,140 காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக   தேசிய சுகாதார சேவையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவத்துள்ளன. இது முந்தைய இரண்டு ஆண்டுகளை விட அதிகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான காய்ச்சலுக்கு ஆளாகுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மகப்பேறு மருத்துவக் கல்லூரி, ரோயல் மருத்துவக் கல்லூரி மற்றும் ராயல் […]

உலகம் செய்தி

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின் முதலாவது தேர்தலை சந்திக்கும் மியன்மார் – ஐ.நாவின் கோரிக்கை!

  • December 24, 2025
  • 0 Comments

கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi) ஆட்சியை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை  கைப்பற்றி  05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மியன்மார் முதலாவது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில்,  முதல் கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 28 ஆம் திகதி காலை 06.00 மணிக்கும் ஆரம்பமாகும். இந்நிலையில் மியன்மாரில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல்களை நடத்துவதில் வன்முறை, அடக்குமுறை மற்றும் மிரட்டல் தீவிரமடைந்து வருவதாக ஐ.நா […]

உலகம்

தைவானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 24, 2025
  • 0 Comments

தைவானின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான தைடுங்கில் (Taitung) இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின்  வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 11.9 கிமீ (7.39 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தைவான் முழுவதும் சேதம் ஏற்பட்டதாக உடனடி அறிக்கை எதுவும் இல்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. 2016 இல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். […]

இந்தியா

வங்கதேசத்தில் அடித்து கொல்லப்பட்ட இந்தியர் – டெல்லியில் வெடித்த போராட்டம்!

  • December 24, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்  இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இன்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் 25 வயதான திபு சந்திர தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக குறைந்தது 10 பேர் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையை கண்டித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த […]

error: Content is protected !!