இலங்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறையினர் குவிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

கண்டி மாவட்ட செயலகக் கட்டடத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சிறப்புத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் சோதனை நடத்தி வளாகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டி மாவட்டச் செயலகக் கட்டடத்திற்குள் வெடிபொருள் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு அநாமதேய மின்னஞ்சல் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம்

அடுத்த 05 ஆண்டுகளில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா!

  • December 26, 2025
  • 0 Comments

​​அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க வடகொரியா உறுதிப்பூண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் முக்கிய வெடிமருந்து நிறுவனங்களை பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ( Kim Jong Un) மேற்படி சமிக்ஞை செய்ததாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “போர் தடுப்பை வலுப்படுத்துவதில் நாட்டின் ஏவுகணை மற்றும் ஷெல் உற்பத்தித் துறை மிக முக்கியமானது” என்றும் கிம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  முக்கிய வெடிமருந்து நிறுவனங்களின் நவீனமயமாக்கலுக்கான […]

இலங்கை

“ஊடகங்கள் அடக்கப்படுகின்றன” – சஜித் குற்றச்சாட்டு!

  • December 26, 2025
  • 0 Comments

சுதந்திரமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க தனது கட்சியால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும்  குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையை ஒரு பொலிஸ் அரசாக மாற்றவும், சர்வாதிகாரத்தை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று அவர் கூறினார். ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் நோய் தொற்று – 06 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

  • December 26, 2025
  • 0 Comments

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வகையைச் சேர்ந்த K என்ற புதிய துணைப்பிரிவு அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் கடுமையாகப் பாதிப்பதாகவும், 105 டிகிரி செல்சியஸ் வரை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!

  • December 26, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச […]

ஐரோப்பா செய்தி

தொழிற்கட்சியின் வரி உயர்வு – ஹொங்கொங்கை விட பின்தங்கும் பொருளாதாரம்!

  • December 26, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டில் (2026) பிரித்தானியாவின் பொருளாதாரம் ஹொங்கொங் மற்றும் பின்லாந்தை விட  ஏழ்மையானதாக இருக்கும் என புதிய கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. நடப்பு அரசாங்கத்தின் வரி உயிர்வுகள் காரணமாக இந்நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) லீக் அட்டவணையில் தற்போது 19 ஆவது இடத்தில் இருக்கும் பிரித்தானியா வரும் ஆண்டில் 21 ஆவது இடத்திற்கு சரியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. தொழிற்கட்சி  தனது  பதவிக்காலத்தில் மிகக் குறைந்த வெற்றியை மட்டுமே […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் இடம்பெற்ற விபரீதம் – பொதுமக்கள் வெளியேற்றம்!

  • December 26, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள கேரவன் பூங்காவில் உயரமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. நேற்று வீசிய புயல் காரணமாக சுமார் 30 டன் எடையுள்ள கிரேன்  சரிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு கூடியிருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குறித்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு தீயணைப்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணம் கருதி  முன்னெச்சரிக்கையாக அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

உலகம் செய்தி

“ குண்டுமழை ஓயட்டும்” : உலகெங்கிலும் அமைதியை வலியுறுத்தும் போப் லியோ!

  • December 26, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா முன்வர வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார். புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை நிகழ்த்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார். வத்திக்கான் நகரில் கூடியிருந்த வழிபாட்டாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று போப்பாண்டவர் பாரம்பரியமாக ஆற்றும் உர்பி எட் ஓர்பி (Urbi et Orbi)  உரையின் போது, ​​உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அவர் அழைப்பு விடுத்தார். உக்ரைனைப் பற்றிப் […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]

உலகம்

கலிபோர்னியாவின் 06 மாவட்டங்களில் அவசரகால நிலை பிறப்பிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில் (California) வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய வானிலை சேவை, “உயிருக்கு ஆபத்தான வளிமண்டல நதி நிலைமைகள்” தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) ஆறு மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இதற்கிடையே பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு 130 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக […]

error: Content is protected !!