உலகம் செய்தி

தாய்லாந்து கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதாக கம்போடியா குற்றச்சாட்டு

  • December 26, 2025
  • 0 Comments

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து விமானப்படை, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியாவின் இராணுவ நிலைகளின் மீது இன்று வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பிறகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. ஆனால் கம்போடியா பாதுகாப்பு அமைச்சகம், தாய்லாந்து பொதுமக்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது. இதன்போது பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக […]

இலங்கை

புதிய கட்டிடத்திற்கு 2026 இல் நிதி ஒதுக்கீடு- பார்வையிட சென்ற அரசியல்வாதிகள்!!

  • December 26, 2025
  • 0 Comments

திருகோணமலை- வான்எல மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன இன்று (26) விஜயம் செய்தனர். கந்தனாய் கல்வி வலயத்திற்குட்பட்ட வான்எல மகா வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக பாடசாலை சமூகத்தினரால் அரசியல் பிரமுகர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு அவசரத் தேவையாக இருக்கும் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு 2026 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு திட்டத்துடன் கல்லூரியின் வளர்ச்சி குறித்து கிழக்கு […]

இலங்கை செய்தி

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

  • December 26, 2025
  • 0 Comments

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருந்த […]

அரசியல் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது

  • December 26, 2025
  • 0 Comments

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை, பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவன் ‘மாகந்துரே மதுஷிடம்’ முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் […]

உலகம்

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் – இருவர் உயிரிழப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில்   கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில்  இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். தாக்குதல்தாரி கிழக்கு நகரமான பெய்ட் ஷீனில் (Beit Shean) பாதசாரி மீது மோதியதாகவும், பின்னர் மேற்கே சுமார் 8 மைல் (12.5 கிமீ) தொலைவில் உள்ள ஐன் ஹரோட் ( Ein Harod) பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அவசர சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகநபர் கபாடியாவைச் […]

அரசியல் இலங்கை செய்தி

குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!

  • December 26, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர். “குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார். இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார். இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார். இதனால் கடுப்பான […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (26) தெரிவித்தார். “ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. இவற்றுக்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.” எனவும் அமைச்சர் கூறினார். போலியான செய்திகளால் நாட்டின் சுகாதாரம்மீதான நம்பிக்கை சீர்குலையக்கூடும். அதேபோல தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, […]

ஐரோப்பா

மக்கள் மத்தியில் ஆதரவை இழந்த பிரித்தானிய பிரதமர்!

  • December 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது. தி இன்டிபென்டன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 ஆம் ஆண்டில் தொழிற்கட்சிக்கு வாக்களித்தவர்களில் 38 சதவீதமானோர் அடுத்த வருடம் வேறு ஒரு தலைவருக்கு வாக்களிக்கவுள்ளதாக  சமிக்ஞை செய்துள்ளனர். தொழிற்கட்சி வாக்காளர்கள்  சர் கீர் ஸ்டார்மரை (Sir Keir Starmer)   வரலாற்றில் மிக மோசமான தொழிற்கட்சி பிரதமராக மதிப்பிட்டுள்ளதாகவும், அடுத்ததாக டோனி பிளேர் (Tony […]

ஆஸ்திரேலியா உலகம் ஐரோப்பா

கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

  • December 26, 2025
  • 0 Comments

தாய்லாந்து மற்றும் கம்போடிய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் தனது நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்போடியாவின் சீயெம் ரீப் (Siem Reap) உள்ளிட்ட பல மாகாணங்களுக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் ட்ராவெல்லர் (Smart Traveller) இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் நிலவும் இராணுவ மோதல்கள், வன்முறை மற்றும் வெடிக்காத கண்ணிவெடிகள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் […]

இந்தியா செய்தி

ஜென்ஸீ தலைமுறையை நான் நம்புகிறேன் –  மோடி

  • December 26, 2025
  • 0 Comments

ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீக்கியர்களின் 10 ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26  வீர பாலகர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி  2022 ஆம் ஆண்டு  அறிவித்திருந்தார். இதன்படி புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘வீர பாலகர் தினம்’ […]

error: Content is protected !!