ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளைஞர்களுக்கு புதிய இடைவெளி ஆண்டு திட்டம் அறிமுகம்

  • December 27, 2025
  • 0 Comments

பாடசாலை மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்களுக்கு இராணுவம், ரோயல் கடற்படை மற்றும் ரோயல் விமானப்படை ஆகியவற்றின் அனுபவத்தை வழங்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் புதிய “இடைவெளி ஆண்டு” எனும் (Gap Year) திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு, சம்பளத்துடன் கூடிய 12 மாத பயிற்சி பாடநெறியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நீண்டகால இராணுவ சேவைக்கு கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் முதல் கட்டமாக 150 […]

இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்துவைக்க உத்தரவு!

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். டக்ளஸ் தோவானந்தா இன்று  கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வுத்துறை தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுள்ளது. தொடர்புடைய செய்தி டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!  

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அடுத்த தேர்தலில் Reform UK முன்னணி – வெளியான கருத்து கணிப்பு

  • December 27, 2025
  • 0 Comments

அடுத்த தேர்தலில் கம்ப்ரியா (Cumbria) நிர்வாகப் பிரிவில் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெறக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு காரணமாக, கம்ப்ரியா (Cumbria) நிர்வாகப் பிரிவில் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சி முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UKIP கட்சியின் முன்னாள் தலைவர் நிகல் ஃபரேஜ் (Nigel Farage) தலைமையிலான ரிஃபார்ம் யுகே (Reform UK), கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. […]

உலகம்

முடிவுக்கு வரும் டொலரின் ஆட்சி, அரியணை ஏறும் தங்கம்!!

  • December 27, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய அலகான டொலர் வரும் காலங்களில் தனது மேலாதீக்கத்தை இழக்கக்கூடும் எனவும், அதற்கு மாற்றீடாக தங்கம் முதலிடத்தை வகிக்கும்  என்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் (Peter Schiff) தெரிவித்துள்ளார். டொலரின் ஆட்சி வீழ்ச்சிக்கு வந்து தங்கம் அரியணை ஏறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிங் டொலரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. தங்கம் முதன்மை மத்திய வங்கி இருப்பு சொத்தாக அரியணை ஏறும். அதாவது […]

இந்தியா

சாதகமற்ற தன்மை – விமான தாமதம் குறித்து வெளியான அறிவிப்பு!

  • December 27, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலவுவதால் சில விமானங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் இன்று தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. இதற்கமைய அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் ராஞ்சி விமான நிலையங்கள் மூடுப்பனி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விமான சேவைகள் தாமதமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாறிவரும் வானிலை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் மேலும் […]

இலங்கை

குண்டு வீச்சுக்கு திட்டம் : 06 பேர் கைது!

  • December 27, 2025
  • 0 Comments

சீதுவயில் உள்ள  இரவு விடுதியொன்றில்  பெட்ரோல் குண்டுவீச்சி தாக்குதலுக்கு  திட்டமிட்டிருந்த ஆறு நபர்கள் ஆறு பெட்ரோல் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு விடுதியின் மேலாளர், ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடங்குவர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • December 27, 2025
  • 0 Comments

வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என  சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தினார். விடுதலைக்கு தகுதியான கைதிகளின் பட்டியல் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், கைதிகள் தொடர்பான கூடுதல் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிர்வாக நடைமுறைகள் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட கைதிகள் […]

உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 05 பேர் படுகாயம்!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வடமேற்கு, டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக  பெருநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வால்டர் வொஷிங்டன் (Walter Washington ) கன்வென்ஷன் சென்டரிலிருந்து சுமார் இரண்டு தொகுதிகள் தொலைவில் நேற்று  இந்த துப்பாக்கிக்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதாள குழு […]

உலகம் செய்தி

இந்த ஆண்டில் உலகை உலுக்கிய பேரழிவுகளால் $120 பில்லியன் இழப்பு!

  • December 27, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் காலநிலை பேரழிவுகள் உலகிற்கு $120 பில்லியன் (£95 பில்லியன்) க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவுகள் ஆசியாவில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் எய்ட் தொண்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு, காலநிலை தொடர்பான 10 பேரழிவுகளை அடையாளம் கண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் $1 பில்லியனுக்கும் (£790 மில்லியன்) அதிகமாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட […]

error: Content is protected !!