உலகம் செய்தி

கபாதியா கிராமத்தில் பலஸ்தீனிய குடும்பங்களை இடமாற்றம் செய்த இஸ்ரேலிய படைகள்

  • December 27, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், வடக்கு இஸ்ரேலில் உள்ள கபாதியா கிராமத்தில் படைகள் பெருமளவானோரை கைது செய்து, பல குடும்பங்களை அவர்களது வீடுகளிலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படைகள் கிராம நுழைவாயில்களை மூடி, சில வீடுகளை விசாரணை மையங்களாக மாற்றி, அந்த இடங்களில் வசிப்பவர்களை இடம்மாற்றம் செய்தாக கூறப்படுகிறது. இதேவேளை, கபாதியாவில் நடந்த கத்திக்குத்து மற்றும் கார்-மோதல் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதற்குப் பதிலாக நடவடிக்கை […]

உலகம் செய்தி

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேல் – மீளப்பெறுமாறு கோரும் சோமாலியா

  • December 27, 2025
  • 0 Comments

இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்ததை மீளப் பெறுமாறு சோமாலியா கோரியுள்ளது. சோமாலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி ஒமர், இந்த நடவடிக்கையை “ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆக்கிரமிப்பு” எனக் கண்டித்துள்ளார். அரசாங்கம் அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தி இதனை சவால் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். சோமாலிலாந்தை முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் செயல்பட்டது. இதன் பிறகு ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை பலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் இஸ்ரேலிய […]

ஐரோப்பா செய்தி

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை – இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

  • December 27, 2025
  • 0 Comments

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையால் எக்ஸெட்டரிலிருந்து (Exeter) எக்ஸ்மவுத் (Exmouth), யோவில் (Yeovil) சந்தி மற்றும் பேசிங்ஸ்டோக் (Basingstoke) வரையிலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எக்ஸெட்டர் சென்ட்ரல் மற்றும் எக்ஸ்மவுத், எக்ஸெட்டர் மற்றும் ஹொனிடன் இடையேயான ரயில் பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஏனைய ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

anirudh-andrea-malaysia-concert-chemistry-viral-video-details பொழுதுபோக்கு

அனிருத் – ஆண்ட்ரியா: மலேசியா மேடையில் மீண்டும் ஒரு மேஜிக்!

  • December 27, 2025
  • 0 Comments

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் இன்று (டிசம்பர் 27) மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனிருத் தனது இசைக்குழுவுடன் நேரலை கச்சேரி நடத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமையா மேடைக்கு வந்து அனிருத்துடன் இணைந்து சில பாடல்களைப் பாடினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒரே மேடையில் நேரலையாகப் பெர்ஃபார்ம் செய்தது […]

ஐரோப்பா செய்தி

IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் ஜெர்மனி!

  • December 27, 2025
  • 0 Comments

சர்வதேச ஆதரவுடன் உக்ரைன் தனது வான் பாதுகாப்பு வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நேற்று ஒன்பதாவது IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு  வழங்கியுள்ளது. IRIS-T ஏவுகணை அமைப்பானது 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஜெர்மனி தலைமையிலான திட்டத்தால் உருவாக்கப்பட்டது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தற்போது IRIS-T ஏவுகணை அமைப்பின் இரண்டு வகைகளை பயன்படுத்துகிறது.  ஒன்று 12 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் […]

இந்தியா செய்தி

டெல்லியில் தேடுதல் வேட்டை – 285 பேர் கைது

  • December 27, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், டெல்லி பொலிஸார் ‘ஆகாத்’ நடவடிக்கை என்ற பெயரில் நேற்று இரவு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு டெல்லி பொலிஸாரால் ‘ஆகாத் 3.0’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய […]

ஐரோப்பா செய்தி

வரலாற்றுச் சிறப்பு மிக்க பேயக்ஸ் திரைச்சீலை – £800 மில்லியன் காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானம்

  • December 27, 2025
  • 0 Comments

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலைக்கு, சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக £800 மில்லியன் மதிப்பிலான காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானித்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பான பேயக்ஸ் திரைச்சீலை அடுத்த ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 1066 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேஸ்டிங்ஸ் போரை சித்தரிக்கும், சுமார் 70 மீற்றர் நீளமுள்ள, துணியில் தையல் மேற்கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பு இதுவாகும். இந்த கலைப்பொருள், இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் […]

உலகம் செய்தி

அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் – ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக  1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும்,  மேலும் 22,349 விமானங்கள் தாமதமாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (New York’s John F. Kennedy Airport)  விமான நிலையம், நியூவார்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையம் மற்றும் லாகார்டியா (LaGuardia) விமான நிலையம் ஆகியவை பயண தாமதங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. விமான ரத்து மற்றும் […]

இலங்கை

திருகோணமலை வீரநகர் பகுதியில் கடலரிப்பு- வீடுகளுக்கு சேதம்!!

  • December 27, 2025
  • 0 Comments

திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது. திருகோணமலை மட்டுமல்லாமல் கிண்ணியா மூதூர் அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கட்பாறைகள் போடப்படாமையினால் கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகளுக்குள் நீர் உட்பகுந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கற்பாறைகளை போட்டு கடல் அரிப்பை தடுக்க […]

இலங்கை

ஒரேநாளில் 12000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • December 27, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் இலங்கையிலும், இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய  கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, “22 காரட்”பவுண் ஒன்றின் விலை, 352,000 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 காரட் பவுண் ஒன்றின் விலை 368,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!