இலங்கை செய்தி

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

  • November 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (27) காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால். குறித்த இடத்தில் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. இவற்றை விரைந்து அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தித் […]

Maaveerar, மாவீரர்கள், Great Heroes, Tributes, Anjali, அஞ்சலி, Remembrance, Respect செய்தி

புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி

  • November 27, 2025
  • 0 Comments

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. காலை வேளையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் த. நவநீதன் தலைமையில் நகரின் பொது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூ தூவி அஞ்சலியினை செலுத்தினர். இதனுடன், வர்த்தக சங்க உறுப்பினர்கள்,  வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மாவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர். வருடந்தோறும் வழமையாக […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சம்யுக்தாவுக்கு 2ஆவது திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…

  • November 27, 2025
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன சம்யுக்தா இன்று கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சம்யுக்தா, விஜய்யின் வாரிசு, சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்தார். சம்யுக்தாவின் முதல் கணவர் பெயர் கார்த்திக். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்த நிலையில், அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற கையோடு விரைவில் இரண்டாம் […]

இலங்கை

சாய்ந்தமருது பகுதியில் கால்வாயில் விழுந்த கார் : மூவர் பலி!

  • November 27, 2025
  • 0 Comments

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது. குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் இருந்த நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவத்தார். மேலதிக […]

உலகம்

பிரேசிலில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு – செல்வந்தர்களுக்கு வைக்கப்பட்டுள்ள குறி!

  • November 27, 2025
  • 0 Comments

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) இன்று ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய சட்டமானது மாதத்திற்கு 5,000 ரியாஸ் ($940) வரை வருமானம் ஈட்டும் மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வழங்கிவரும் வருமான வரி சலுகையை இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரது தேர்தல் வாக்குறுதியையும்  பூர்த்தி செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த சட்டமானது, […]

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!

  • November 27, 2025
  • 0 Comments

கடுமையான வானிலை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை மதிப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். […]

இலங்கை

தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

  • November 27, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச தெரிவித்தார். “பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். “தேசிய பேரிடர் நிலையை அறிவிக்க ஏற்பாடு […]

ஐரோப்பா

தன்னார்வ இராணுவ சேர்க்கை – மக்ரோன் வெளியிடவுள்ள முக்கிய தகவல்!

  • November 27, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரான்ஸ் புதிய இராணுவ சேவை திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron)   இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு இளைஞர்களுக்கு தன்னார்வமாக இராணுவத்தில் பணியாற்ற ஒரு புதிய விருப்பத்தை வழங்குவதற்கான தனது நோக்கத்தை மக்ரோன் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்படுத்திய நிலையில் புதிய அறிவிப்பு வரவுள்ளது. ரஷ்யாவின் போர் ஐரோப்பிய கண்டத்தை “பெரும் ஆபத்தில்” ஆழ்த்தியதால், பிரான்ஸ் தனது பாதுகாப்பை அதிகரிக்க முயற்சி செய்வதாக அந்நாட்டின் ஜனாதிபதி […]

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • November 27, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என்று திணைக்களம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

சீனாவில் தொழிலாளர்கள் மீது மோதிய ரயில் – 11 பேர் பலி!

  • November 27, 2025
  • 0 Comments

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ரயில்வே தொழிலாளர்கள் பூகம்பக் கண்டறிதல் கருவிகளை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய ரயில் வளையமைப்பை சீனா கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பயணங்களை […]

error: Content is protected !!