இலங்கை

“டிட்வா” புயல் எங்கு மையம்கொண்டுள்ளது? வடக்கிற்கு குறையாத ஆபத்து

  • November 30, 2025
  • 0 Comments

“டிட்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது. இது தற்போது இலங்கையை விட்டு விலகி வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் வானிலையில் புயலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, வடக்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போர்க்கொடி – இராஜினாமா செய்ய அழைப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு  திட்டத்தில் இடம்பெற்ற  ஊழலுக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடரக் கோரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இடதுசாரிக் குழுக்கள் மணிலாவின் பிரதான பூங்காவில் தனியொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழலுடன் சம்பந்தப்பட்ட  அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது […]

உலகம்

இந்தோனேசியாவில் தொடரும் சோகம் – 248 பேர் உயிரிழப்பு, அவசரகாலநிலை பிறப்பிப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் தொடரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 3000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 78 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி தேவைப்படுபவர்களை அணுகுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி சவாலான சூழ்நிலை காரணமாக ஆச்சே (Aceh) மாகாணத்தில் […]

இலங்கை

திடீரென தாழிறங்கிய பிரதான வீதி

  • November 30, 2025
  • 0 Comments

யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள வீதி இன்று (30) திடீரென தாழிறங்கியதை அடுத்து கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யக்கல முதல் திஹாரிய வரையிலான பாதையை மறு அறிவிப்பு வரும் வரை அதிகாரிகள் மூடிவிட்டனர். பொறியாளர்கள் சேதத்தை மதிப்பிட்டு அவசரகால பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம், […]

செய்தி

யாழில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை

  • November 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை கருத்து & பகுப்பாய்வு

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

  • November 30, 2025
  • 0 Comments

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • November 30, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் இதனால் மக்கள் சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவில் (California) பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த துயரம்!

  • November 30, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக  ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும்,  அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் ஒருவரை குறி வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் […]

இலங்கை

மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேர் மீட்பு

  • November 30, 2025
  • 0 Comments

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகம் செய்தி

வெனிசுலாவோடு அதிகரிக்கும் மோதல் – விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

  • November 30, 2025
  • 0 Comments

வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார். அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்திலிருந்து […]

error: Content is protected !!