ஆசியா

பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறைச் சம்பவங்கள் – ஊரடங்குச் சட்டம் அமுல்

  • July 20, 2024
  • 0 Comments

பங்களாதேஷில் நாடு தழுவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷின் அரச பணிக்கான ஒதுக்கீட்டில், கடந்த 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புதல்வர்கள் மற்றும் பேரன்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் இதன்போது வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து பங்களாதேஷில் இணையச் சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

  • July 20, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. குறித்த விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.13 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் […]

உலகம் செய்தி

ஹைதி கடலோரப் பகுதியில் அகதிகளுடன் தீப்பற்றிய கப்பல் – 40 பேர் பலி

  • July 20, 2024
  • 0 Comments

ஹைதி கடலோரப் பகுதியில் அகதிகளை அதிகளவில் ஏற்றி வந்த படகு தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் உயிரிழந்தனர். 81 பேரை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஹைதியில் இருந்து பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்ட Turks and Caicos தீவுகள் நோக்கிச் சென்றது. இதன் போது, படகில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹைதி கடலோரக் காவல்படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 41 பேரை மீட்ட நிலையில் 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி […]

வாழ்வியல்

வெறும் வயிற்றில் தேன் குடித்தால் என்ன நடக்கும்?

  • July 20, 2024
  • 0 Comments

இயற்கை அன்னையின் இயற்கையான இனிப்புகளுள் ஒன்று, தேன். மலைத்தேன், பாட்டில் தேன், பாட்டில் தேனிலேயே விதவிதமான வகைகள் என பல இருந்த போதும், தேனிற்கென்று பல்வேறு தனித்துவ மருத்துவ குணங்கள் பல இருக்கின்றன. இதை, பலர் வெந்நீரில் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பர். உடல் எடையை குறைக்க, மெட்டபாலிசத்தை அதிகரிக்க என பல்வேறு நன்மைகளுக்காக உபயோகிக்கப்படுகிறது தேன். இதை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு… தேனை வைத்து நடத்தப்பட்டிருக்கும் […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் விரைவில் – ஜோ பைடன் நம்பிக்கை

  • July 20, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்க இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தான் போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்தார். கோவிட் தொற்று காரணமாக தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர், அடுத்த வாரம் முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரசாரத்தின்போது, டிரம்ப்பின் திட்டங்களை அம்பலப்படுத்துவதுடன், தனது அரசின் சாதனைகளையும், அமெரிக்கா குறித்த பார்வையையும் எடுத்துரைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

படிப்படியாக மீண்டு வரும் ஆஸ்திரேலிய விமான நிலையங்களின் செயற்பாடுகள்

  • July 20, 2024
  • 0 Comments

பல கணினி செயலிழப்புகள் மற்றும் ரத்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் படிப்படியாக மீண்டு வருகின்றன. சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டில் உள்ளன மற்றும் குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் உட்பட பல விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளன. இருப்பினும், பிராந்திய விமான நிறுவனமான REX இந்த சேவை நிறுத்தத்தால் பாதிக்கப்படவில்லை. சில ஜெட்ஸ்டார் விமானங்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன, பெரும்பாலான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். […]

அறிந்திருக்க வேண்டியவை

சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான நகரங்கள் அறிவிப்பு

  • July 20, 2024
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான 10 நகரங்களை பெயரிடப்பட்டுள்ளன. போர்ப்ஸ் பத்திரிகையின்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான நகரமாக சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரம் 02வது இடத்துக்கும், கனடாவின் ரொறன்ரோ நகரம் 03வது இடத்துக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையின்படி, சிட்னி நகரம் 4வது இடத்தையும், மெல்போர்ன் நகரம் 9வது இடத்தையும் எட்டியுள்ளன. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் இந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் செயலிழந்து விட்டதா… சரி செய்வது எப்படி?

  • July 20, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகளில் பெரும் இடையூறுகள் காணப்பட்ட நிலையில், மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் என பல நிறுவனங்கள் முடங்கின. இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ( CrowdStrike) ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் முடங்கியுள்ளதால், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ், அலெஜியன்ட் ஏர் ஆகியவை தங்கள் விமான சேவைகளை […]

செய்தி விளையாட்டு

கம்பீருடனான பழைய பிரச்சினை பற்றி BCCIக்கு கோலி வழங்கிய வாக்குறுதி

  • July 20, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்தது. தற்போது இலங்கைக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணிகள் அவரது தலைமையில் களமாட உள்ளன. வருகிற 27 ஆம் திகதி முதல் தொடங்கும் டி20 தொடருக்கான இந்திய அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார். அதேநேரத்தில், ஆகஸ்ட் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

  • July 20, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடக்கு பகுதியில் தங்கியிருந்த அகதிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். Pont de Flandres பகுதியில் இருந்து 150 பேரும் Pont de Stains பகுதியில் இருந்து 80 பேரும் என மொத்தம் 230 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாகவும், இல் து பிரான்சுக்கு வெளியே அவர்கள் பல்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்றவருட இறுதியில் இருந்து இந்த அகதி […]

error: Content is protected !!