இலங்கை செய்தி

கோட்டாபயவைத் விமானப்படையே தப்பிக்க வைத்தது

  • July 24, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற கோட்டா கோ கோம் (Gotta Go […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விஜேதாச ராஜபக்ச – நாளை விசேட அறிவிப்பு

  • July 24, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் இதன்படி, நாளை (25) காலை 10 மணிக்கு ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு 07, ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. பல மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளன. அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பு ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தி விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை

  • July 24, 2024
  • 0 Comments

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தகுதிப்பெற்றுள்ளது இன்றைய போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இவ்வாறு அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை […]

உலகம்

உலகின் மிக வெப்பமான நாள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை வெளியிட்ட தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் முதற்கட்ட தரவுகளின்படி, ஜூலை 21 உலகளவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான நாளாகும் . ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 17.09 டிகிரி செல்சியஸை எட்டியது, இது 1940 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகவும் வெப்பமானது என்று ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

இலங்கை செய்தி

யாழ். நீதிமன்றுக்கு அருகில் வாள் வெட்டு முயற்சி

  • July 24, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 30ஆம் திகதி நீதிமன்றை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்ப முற்பட்டவரை , நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் வைத்து மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வாளினால் வெட்ட முயன்றுள்ளனர். வன்முறை கும்பலில் தாக்குதலில் இருந்து தப்பித்த இளைஞன் , நீதிமன்றில் தஞ்சமடைந்துள்ளார். […]

பொழுதுபோக்கு

மிரள வைக்கின்றது ‘டிமான்டி காலனி 2’ – வெளியானது ட்ரைலர்

  • July 24, 2024
  • 0 Comments

அருள்நிதி நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படத்தின் வெற்றியை  தொடர்ந்து, ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திலும், நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், சஞ்சனோ கார்லிக், அர்ச்சனா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிமான்டி காலனியை விட்டு மீண்டும் […]

பொழுதுபோக்கு

இந்தியாவிலேயே யாருக்கும் கிடைக்காத பெறுமை ஷாருக்கானுக்கு கிடைத்தது

  • July 24, 2024
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிந்தியையும் தாண்டி அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கிங் படத்தில் நடிக்கவிருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு பெருமை கிடைத்திருக்கிறது. ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் […]

இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு வர்த்தமானி இரத்து

  • July 24, 2024
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் முதலாளிமார் […]

இலங்கை

இலங்கை: ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு!

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன்படி வேதன முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அவர்களின் சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை இது மேற்கொள்ளப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி விளையாட்டு

இந்திய நட்சத்திரங்களின் ஓய்வை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • July 24, 2024
  • 0 Comments

இலங்கையின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, எதிர்வரும் டி20 தொடரில் இந்தியாவின் மூன்று மெகா ஸ்டார்கள் இல்லாததை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த மாதம் டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்ற பிறகு குறுகிய வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். “ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உலகின் சிறந்த வீரர்கள். அவர்களின் திறமை மற்றும் அவர்கள் […]

error: Content is protected !!