இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மேலும் விளக்கமறியல்!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் 2024 பெப்ரவரி 24 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டார்.

இலங்கை செய்தி

எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதாள உலகக் குழு

  • July 25, 2024
  • 0 Comments

பாதாள உலக குழுக்களே எதிர்க்கட்சிகளுக்கு புகலிடம் வழங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். யுக்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால்தான் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கூறினார். பொலிஸ் மா அதிபர் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தோட்டத் […]

வட அமெரிக்கா

இறுதிக்கட்டத்தில் காஸா போர் நிறுத்தம், பிணைக்கைதி விடுதலை உடன்பாடு

  • July 25, 2024
  • 0 Comments

காஸாவில் சண்டைநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான உடன்பாடும் ‘இறுதிக்கட்டத்தில்’ இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூலை 24) தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. நெட்டன்யாகு உடனான பேச்சுவார்த்தையின்போது சில வேறுபாடுகளைக் களைய பைடன் முற்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், பிணைக் கைதிகளின் விதி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஹமாஸ் அமைப்பின் கையிலேயே உள்ளது என அந்த மூத்த நிர்வாக […]

உலகம் செய்தி

சூறாவளி காரணமாக தைவானில் வலுவான விளைவுகள்

  • July 25, 2024
  • 0 Comments

வடக்கு தைவானைப் பாதித்துள்ள ‘காமி’ புயல் காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஒரு சரக்கு கப்பலும் சூறாவளி காரணமாக மூழ்கியது. கடந்த 8 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக இது கருதப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு 227 கிலோமீட்டர் என கூறப்படுகிறது. புயல் தைவான் வழியாகச் சென்று சீனாவின் புஜியான் மாகாணத்திற்குள் நுழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் ஆண்களின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

  • July 25, 2024
  • 0 Comments

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமான குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொத்த குடும்ப அலகுகளில் 60.5 வீதமான சராசரி மாத வருமானம் குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப அலகு கணக்கெடுப்பின் 2023 அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 03 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 54.9 வீதமானவர்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 93.5 வீதமானவர்கள் பாதிப்பைக் குறைப்பதற்கான உத்திகளைக் […]

இலங்கை

இலங்கையில் தேர்தல் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அங்கீகரிக்கப்படவில்லை!

  • July 25, 2024
  • 0 Comments

இலங்கையில் தேர்தல் செலவுகளை குறைக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எவையும் இதுவரையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொறுப்பான அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு முன்னிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வாக்களிக்கும் போது விரல் வர்ணம் பூசுவதற்கான செலவைக் குறைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொறுப்பு அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார கேள்வி […]

இலங்கை செய்தி

TNL தொலைக்காட்சி மூடப்படுகொன்றது

  • July 25, 2024
  • 0 Comments

ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் TNL சேனலின் அனைத்து ஒளிபரப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21, 1993 இல் இலங்கை அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட TNL, 31 வருடகால இலங்கை தொலைக்காட்சி வரலாற்றை வடிவமைத்துள்ளது. இதனால் TNL சேனல் அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸுக்குச் சொந்தமான சுப்ரீம் டிவிக்கு நாடு தழுவிய அலைவரிசைகளைப் பெறும். அதன்படி ஆகஸ்ட் 1-ம் தகதி முதல் TNL சேனல் அலைவரிசைகளில் சுப்ரீம் டிவி சேனலைப் […]

அறிந்திருக்க வேண்டியவை

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள்

  • July 25, 2024
  • 0 Comments

பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்றஅறிவியல் இதழில் வெளியாகிஉள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா […]

இலங்கை

கொழும்பில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் பலி

கிரேண்ட்பாஸ் – வதுல்லவத்தை பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஆசியா

கடலில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் கப்பலால் மணிலாவுக்கு எண்ணெய்க் கசிவு அபாயம்; ஒருவர் மாயம்

  • July 25, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் கடல் பரப்பில் மோசமானப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 25) எண்ணெய்க் கப்பல் ஒன்று மூழ்கியதால் பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சம்பவத்தில் காணாமல் போன ஒரு கப்பல் ஊழியரை கடலோரக் காவல் படையினர் தேடி வருகின்றனர். “எம்டி டெர்ரா நோவா எனும் கப்பலில் இருந்த 16 ஊழியர்களும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஒருவர் மட்டும் காணவில்லை,” என்று சம்பவத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பீன்ஸ் போக்குவரத்து அமைச்சர் ஜெய்ம் பாட்டிஸ்டா தெரிவித்தார். மணிலாவுக்குத் தெற்கே […]

error: Content is protected !!