ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து

  • July 25, 2024
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் படையின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் மாநிலத்தின் கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள சிறிய நகரமான காம்பாலின் மவுண்ட் ஆண்டர்சன் நிலையத்திற்கு அருகில் நடந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மோதிக்கொண்டதாக ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரு பைலட்டால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நேரத்தில், விமானத்தில் இருந்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் முதல்முறையாக பிறந்த வெள்ளை காண்டாமிருகம்

  • July 25, 2024
  • 0 Comments

பிரான்சின் zoo de Montpellier (Hérault) மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருகம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையில் வெள்ளை காண்டாமிருக குட்டி ஒன்று பிறப்பது இதுவே முதன்முறையாகும். ஜூலை 20 ஆம் திகதி சனிக்கிழமை இந்த குட்டி பிறந்ததாக நேற்று ஜூலை 24 ஆம் திகதி குறித்த மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது. Nola எனும் ஒன்பது வயது பெண் காண்டாமிருகத்துக்கும், Troy என அழைக்கப்படும் பதின்மூன்றரை வயதுடைய காண்டாமிருகத்துக்கும் இந்த குட்டி பிறந்துள்ளது. இந்த காண்டாமிருக குட்டிக்கு விரைவில் […]

உலகம்

பெல்ஜியம் பயங்கரவாத விசாரணையில் 14 வீடுகளில் சோதனை: ஏழு பேரிடம் விசாரணை

பெல்ஜிய காவல்துறையினர் பயங்கரவாத விசாரணையில் 14 வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெடரல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இத்தனை அறிவித்துள்ளது. ஏழு பேர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். “அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு தயார் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலின் குறிப்பிட்ட இலக்குகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுமா என்பதை நீதிபதி பின்னர் முடிவு செய்வார். ஆண்ட்வெர்ப், லீஜ் மற்றும் கென்ட் நகரங்களிலும், பிரஸ்ஸல்ஸ் பிராந்தியத்திலும் வீடுகளில் சோதனைகள் நடந்தன. இந்த […]

இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து – பெண் ஒருவர் பலி

  • July 25, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோடியதாகவும் வேறொருவரை பொலிஸார் கைது […]

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நுவான் துஷார விலகல்

  • July 25, 2024
  • 0 Comments

இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு […]

செய்தி தமிழ்நாடு

உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

  • July 25, 2024
  • 0 Comments

உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் பகுதியை சேர்ந்த மலையப்பன் ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் பள்ளி வாகனம் ஒட்டும்போது திடிர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது மிகவும் சிரமப்பட்டு பள்ளி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கின் மீது மயங்கி சரிந்துள்ளார். மலையப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளி […]

பொழுதுபோக்கு

சஞ்சய்யின் பிறந்தநாளுக்கு லைகா நிறுவனம் கொடுத்த சர்ப்பிரைஸ்.. என்னன்னு பாருங்க..

  • July 25, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் விஜய். இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தனது தந்தையை போலவே சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். சினிமா மேக்கிங், டைக்ரஷன் குறித்து படிப்பை வெளிநாட்டில் பயின்றுள்ள ஜேசன், Pull The Trigger என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். லைகா […]

இலங்கை செய்தி

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

  • July 25, 2024
  • 0 Comments

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திற்கு வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது

  • July 25, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்தினை மறித்து சோதனையிட்டனர். அதன் போது பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு […]

உலகம் செய்தி

எரிபொருள் டேங்கர் கடலில் மூழ்கியது

  • July 25, 2024
  • 0 Comments

1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். காணாமல் போனவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!