இலங்கை செய்தி

பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல்: புதுக்குடியிருப்பில் பரபரப்பு சம்பவம்

  • July 30, 2024
  • 0 Comments

புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக காணிக்கு உரிமை கோரி வந்துள்ளார். இந்நிலையில் ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடனும் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண்மணி ஒருவர் இன்றையதினம் (30.07.2024) பொலிஸாரால் […]

ஐரோப்பா

உக்ரைனில் தீவிரமடியும் போர்: ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எதிராக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானை எச்சரித்ததாக எலிசி அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் கவலைக்குரிய விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இணங்க வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி தமிழ்நாடு

பிரியாணி மேன் கைது

  • July 30, 2024
  • 0 Comments

பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரவி என்பவரை, தமிழக சைபர் கிரைம் பொலிசார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

இலங்கை செய்தி

நல்லூர் கொடிச்சீலைக்கு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

  • July 30, 2024
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து […]

இலங்கை செய்தி

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

  • July 30, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற அறிவிப்பை ஒருங்கிணைந்த சேவைகள் சுற்றறிக்கையின் ஊடாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு இது தொடர்பான […]

விளையாட்டு

SLvsIND – இலங்கை அணிக்கு 138 ஓட்டங்கள் இலக்கு

  • July 30, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணிக்கு 138 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது. இந்திய அணி சார்பில் சுப்மன் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு செயலாளரின் விசேட அறிவிப்பு

  • July 30, 2024
  • 0 Comments

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில், பாதுகாப்பு அமைச்சு நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மக்களுக்கு சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது என்றும் […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் நடந்த கோர விபத்து: தலை துண்டிக்கப்பட்டு பெண் பலி!

அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் நொச்சியாகம நகரின் மத்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர். நொச்சியாகம பகுதியில் உந்துருளி மீது சொகுசு பேருந்து மோதியதுடன், அதில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் விபத்திற்குள்ளாகினர். சம்பவத்தில் பெண் பேருந்தின் சில்லுகளில் நசுங்கிய நிலையில் […]

இந்தியா செய்தி

கேரள மண்சரிவு – 120 பேர பலி, 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்

  • July 30, 2024
  • 0 Comments

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்குப் பிறகு நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எனவும், அவர்கள் அவர்களது குடும்பங்கள் சிறிய வீடுகளில் அல்லது தற்காலிக வீடுகளில் வசித்து வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பட்டியலில் சங்கக்காரவின் பெயர்

  • July 30, 2024
  • 0 Comments

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் அந்நாட்டு அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேத்யூ மோட் தற்போதைய ஒரு நாள் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார், மேலும் மோட்டின் சேவை அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. மேத்யூ மோட்டைத் தொடர்ந்து இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சங்கக்காரவை நியமிக்க பலர் சம்மதித்துள்ளதாக டெலிகிராப் யுகே செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், சங்கக்காரவுக்கு […]

error: Content is protected !!