2024 தேர்தலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிக்கலும்!
ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாக (2024) அமைந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக பல நாடுகள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தற்போது தலைமை வகிக்கும் ஆட்சியாளர்களின் புகழ் மக்கள் மத்தியில் குறைந்து வருவது வரும் தேர்தல்களில் தாக்கும் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே உக்ரைன் – ரஷ்ய யுத்தம், அதேபோல் ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தம் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைத்துள்ளது.
இந்த போர்கள் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் படுகுழியில் விழுந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை. போருக்கு முன்னதாக மனித இருப்பை ஆட்டிப்படைத்த கொரோனாவின் தாக்கம், அதில் இருந்து மீண்டுவர மக்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த போர் நிலைமை மீண்டும் மனித அஸ்திவாரத்தை ஆட்டிபார்க்க ஆரம்பித்துள்ளது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க தற்போது ஐரோப்பிய நாடுகளில் பொருளாதர நிலைவரம் குறித்துதான் மக்கள் பெரும் கரிசனையை வெளிப்படுத்தி வருகின்றனர். வறுமையின் அப்பட்டமான யதார்த்தம் அரசியல் நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஐந்து ஐரோப்பியர்களில் ஒருவர், 95 மில்லியன் தனிநபர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஐரோப்பிய ஆணையம் இந்த எண்ணிக்கையை 2030 க்குள் 15 மில்லியனாகக் குறைக்க வேண்டும் என அழுத்தத்தில் உள்ளன.
பொதுவாக வரையறுப்பதாயின் தொற்றுநோய், உக்ரேனில் மோதல்கள், பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலை உயர்வு உள்ளிட்ட சமீபத்திய உலகளாவிய சவால்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 3 மில்லியன் ஐரோப்பியர்களை வறுமையில் தள்ளியுள்ளது என்று கூறலாம்.
இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், தற்போது வறுமை ஒழிப்புக்கு செய்ய வேண்டிய விடையங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக உதவி திட்டங்களை அறிமுகப்படுத்துவதை சொல்லலாம். ருமேனியாவில் உள்ள ஒரு NGO கிராமப்புற வெளியேற்றம், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் தரமான உணவு குறைந்த வருமானம் உள்ளவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் புதுமையான அணுகுமுறைகளை கண்டறிவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட ஐரோப்பிய நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினைதான் சட்டவிரோத புலம்பெயர்வு. தற்போது புலம்பெயர்வோருக்கு எதிரான மனோநிலையில் ஐரோப்பிய மக்கள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவை அணைத்தும் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.